பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

களிடையில் இவ்விரண்டையும் பாராட்டுவதிலேயே அர்த்தம் இல்லை. ஆனால் இவைகளின் மூலம் உன்னை நீ அடையாளம் கண்டுகொண்டாயெனில் இவைகளின் நோக்கம் நிறைவேறிய மாதிரியே. இக்கதைகள், தாம் வெளிப்படுவதற்கு என்னை ஒரு காரணமாக உபயோகப்படுத்திக் கொண்டிருக்கலாம்; ஆனால் இவைகள் வெளிப்பட்ட பிறகு இவைகளைப் பார்க்கையில் நானும் உன் மாதிரி தான். எப்படியும் இப்புத்தகத்திற்கு நான் காரணம் இல்லை. நீதான். அல்லது உன் மாதிரி நாலுபேர்மாசு, வை.சு, தாத்து, வேம்பு, செல்லம், ரங்கன்இவைகள் உனக்கு வெறும் பெயர்கள். எனக்கு இவர்கள் இப்பெயரின் அர்த்தங்கள்- உன் மாதிரி. ஆகையால் இந்த உண்மையை- வெளிப்பூச்சின் அடியில் புதைந்து கிடக்கும் உண்மையின் ஒரே தன்மையைப் பற்றி உன்னிடம் சொல்லத்தான் வந்தேன். இது எனக்கு எப்பவும் அலுக்காது. நான் இருக்கும் வரை, இதை நீ புரிந்து கொண்டாலும், புரிந்து கொள்ளாவிட்டாலும், செவி சாய்த்தாலும், சாய்க்காவிட்டாலும் சொல்லிக் கொண்டுதான் இருப்பேன். இனி இவைகள் உன்னுடையவை. லா. ச. ராமாமிருதம்