பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

令 8s: や லா. ச. ராமாமிருதம் வாங்குவான். கடைக்கு மாத்திரம் முதலாளியில்லை அவன்; தொழிலிலேயே அவன் முதல்தான்! அவன் சமையலுக்கும் பட்சணங்களுக்கும் ஏகப்பட்ட கிராக்கி. இங்கே கலியாணம், அங்கே பிறந்தநாள், இங்கே டீ பார்ட்டி, அங்கே விருந்துஎன்று எப்பொழுதுமே கிராக்கி, அப்போதெல்லாம், அவனோடு அவன் பரிவாரம்- அதில் நானும்- கரண்டி களையும், அண்டாக்களையும் தூக்கிக்கொண்டு போவோம். “கோட்டையடுப்பருகில் மணை போட்டு உட்கார்ந்து கொண்டு அதிகாரம் பண்ணுவான். வேலையெல்லாம் ஆனபிறகு அடுப்பிலிருந்து இறக்கும் சமயத்தில் ஒரோரு பதார்த்தத்திலும் ஒரு கரண்டி எடுத்து மூக்கண்டை கொண்டு போய்- முகர்ந்துகூட அல்ல- வெறுமென மூக்கண்டை கொண்டுபோய், பதஞ் சொல்லிச் சரிப்படுத்துவான். மெய்யாகவே அவன் கையில் ஜாலமிருந்தது. அவன் ஒரு சாமானைப் பக்குவம் பண்ணினபிறகு, அதைச் சமைத்தவனே பிரமிக்கும்படி, அதன் மதுரம் அதிகரித்திருக்கும். "ஆனால் கோபம் வந்தால் பேய்க்கு வருவது போல் தான்!” "ஒரு சமயம் ஒரு உத்தியோகதஸ்தன் வீட்டுக்கு வேலைக்குப் போயிருந்தோம். ஏதோ அவனுக்குச் சம்பளமும் வேலையும் உயர்ந்ததற்காக, நண்பர்களுக்கு விருந்தாம். "அடுப்பு மிகவும் புகைந்தது என்று அதில் சட்டென ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றியதைப் பார்த்துக்கொண் டிருந்துவிட்டு, நேரே வந்து, சுழற்றி என்னைக் கன்னத்தில் விட்ட அறையின் வேகத்தில் தொலை தூரத்தில் 'தொப் பென்று விழுந்தேன். அறையின் கனம் என்மேல் ஒரு வண்டி செங்கல் சரிந்தாற்போலிருந்தது. "யார் வீட்டு சொத்துப் போச்சுன்னு பண்ணறே? அடுப்பு எரிய விடறானாம், விடறான்- மடையன்!”