பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புற்று : 85 ஒரு தடவை தெருவில் போய்க்கொண்டிருக்கையில் என் மேலேயே ஏறிவிடுவதுபோல் என் பின்னால் ஒரு கார் வந்து 'சடக் கென்று நின்றது. அவள் மாத்திரம் உட்கார்ந்து கொண் டிருந்தாள், சிரித்தவண்ணம். அவள்தான் ஒட்டிக்கொண் டிருந்தாள். அவள் மேலிருந்து வீசும் வாசனையில் எனக்கு மயக்கம்கூட உண்டாயிற்று. பென்ஸிலால் வெகு ஜாக்கிரதை யாகத் தீட்டியிருந்த புருவங்கள் வெகு ஒழுங்காய் வளைந் திருந்தன. உதடுகள் முகத்தில் முளைத்த இரத்தப் பூவாய்த்தா னிருந்தன. “ஏறி உட்கார்- பின்னால் இல்லை; இங்கே- கிட்ட!” முழு வேகத்தில் பறந்தோம். கடைகளும், வீடுகளும் துரத்தில் பங்களாக்களும், பிறகு வெறும் மரங்களும் வரிசை வரிசையாய் எங்கள் இருமருங்கிலும் பறந்தன. அந்தி சூரியன் வானத்தை இரத்த விளாறாக்கிக்கொண்டிருந்தான். அதைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டுப் பிறகு சுற்று முற்றும் நோக்குகையில் நாங்கள் கடற்கரையில் ஒரு ஒதுக்கிடத்துக்கு வந்திருந்தோம். . 'சட்டெனக் காரை நிறுத்தினாள். அப்படியே சற்று நேரம் என்னை ஏற இறங்கப் பார்த்தாள் புன்சிரிப்புடன். 'உம்- நீ நன்றாய்த்தானிருக்கிறாய்- இந்தச் சந்தனக் கலர் ஜிப்பா உனக்கு ஒத்துத்தானிருக்கிறது-” எவ்வளவு உண்மையாயிருந்தாலும்கூட நேர்ப் புகழ்ச்சி, லஜ்ஜையைத்தான் உண்டாக்குகிறது. அதுவும் இம்மாதிரிப் புகழ்ச்சியால் அருவருப்புத்தான் தட்டுகிறது. நான் வானத்தைப் பார்த்துக்கொண்டே- நேரமாய்விட்டாப்போலிருக்கிறதே, திரும்பலாமா?- என்று கேட்டேன். சின்னக் குழந்தை மாதிரி உதட்டைப் பிதுக்கிக்கொண்டே இப்பத்தானே வந்தோம் என்ன அவசரம்? இந்த இடம் ஜோரா