பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 * லா. ச. ராமாமிருதம் "கடிதத்தை முடித்ததும் ஒருமுறை படித்துப் பார்த்தேன். எனக்கு ஒரு பிரதி வைத்துக்கொள்ளாமல் போனேனே என்று கூடத் தோன்றியது. அவ்வளவு நன்றாய் அமைந்திருந்தது-" - "என்ன எழுதியிருந்தாய்? என்று அவனின்றும் பிரிந்த அது கேட்டது. "அது எப்பவோ நடந்தது; இப்பொழுது கேட்டால் எப்படித் தெரியும்?” என விசித்தான். "இல்லை. இப்பொழுதுதான் உனக்குத் தெரியாத தெல்லாம் தெரியும்- புரியாததெல்லாம் புரியும். சொல்; உனக்கு வரும் வரும் பார்-” அது சொல்லியதுபோலவே அவன் படிக்கப் படிக்க, நெருப்பில் எழுதியதுபோல் எழுத்துக்கள் படர்ந்துகொண்டே போயின.! அநேக ஆசீர்வாதம் அல்லது நமஸ்காரம்- அல்லது கடிதத்தை ஆரம்பிக்க எதுவோ, அது. "நீ எவ்வளவு சாமர்த்தியசாலியாயிருப்பினும், எப்படியும் நீ என்னைவிட மூத்தவள்தான் என்று தோன்றுகிறது. உன் வயதை மறைக்க நீ படும் பாடும், நிரந்தர இளமையாக நீயே உனக்குத் தோன்றுவதற்காக, உன்னையே நீ ஏமாற்றிக் கொள்வதற்காக தனியாக நடையுடை பாவனைகளையும், திரிசங்கு சுவர்க்கத்தையும் நீ சிருஷ்டித்துக் கொள்வதிலிருந்து நீ உனக்கு ஒப்புக்கொள்ளாவிட்டாலும், உனக்கே தெரியும். அதில் உன்னுடைய செளகரியத்திற்காக எனக்குக் கொடுத் திருக்கும் அல்லது கொடுக்கப் பார்க்கும் வேஷமும் எனக்குத் தெரிகிறது. மிருகங்கள் பசி வேளைக்கும், தற்காப்புக்கும்தான் ஒன்றை யொன்று அழித்துக்கொள்கின்றன. மற்றப் பொழுதில் ஒன்றை யொன்று, வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும்