உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

16

யும் முன்னேறி வருகின்றன என்பதையும் இவர்கள் பார்க்க மறுக்கிறார்கள்.

150 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்தியாவில் ஆங்கிலத்தை

போதிய அளவு கற்றவர்கள் நூற்றுக்கு ஒருவர்கூட இல்லையென் பதையும் இவர்கள் சிந்தித்துப் பார்க்கத் தவறுகிறார்கள்.

இந்திய மொழிகளில் ஒரு மொழிதான் இந்திய அரசாங்கத்தின்

நிர்வாக மொழியாக இருக்க முடியும், இருக்க வேண்டும் என்ற ஜனநாயக உணர்வையும் கோரிக்கையையும் கணக்கிலெடுக்க இவர்கள் விரும்பவில்லை.

  தம்மையே பார்ப்பதால்
காரணம், ஜனநாயக இந்தியாவில் ஜனநாயக தமிழகத்தின் எதிர்காலத்தை முக்கியப்படுத்துவதைவிட, இன்றைய தங்கள்

நலனுக்கு எத்தகைய இடைஞ்சலும் ஏற்படக் கூடாது என் பதையே முக்கியப்படுத்துகிறார்கள், ஆங்கில அறிவால் கிடைத்த பட்டம் பதவிகளுக்கு, நலநொச்சிகளுக்கு அபாயம் நேருமோ என்ற அச்சத்திலிருந்து தான் ஆங்கிலத்தைப் பற்றி அதிகப் பெருமை அடித்து, 'ஆங்கிலம் எந்நாளும் வேண்டும், இந்தி ஒரு நாளும் கூடாது' என்ற ஆவேசத்தில் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள், ஆங்கிலமே என்றென்றும் வேண்டுமென்ற கூக்குரல், ஆங்கிலம் படித்த தங்களின் நலன்களை, சாசுவதமாக்கப் போடும் கூக்குரலேயாகும்.

மூன்றாவதாக, மொழிப்பிரச்னையில், இவர்கள் கோடானு

கோடி மக்கள் பக்கம் நின்று பார்க்காமல், தங்கள் பக்கம் நின்று பார்ப்பதினால் இந்த "நல்லறிவாளர்" வரிசையில் யாரைப் பார்க்க முடிகிறதும் ஆங்கிலம்தான் சர்வ வல்லமையுடையது என்கின்ற "திட சித்தர்களும்", இந்தியை வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று அர்ச்சனை செய்பவர்களும் அணிவகுத்து நிற்பதைப் பார்க்கிறோம்.

தமிழின் வளர்ச்சியில் நம்பிக்கை உடையவர்களையோ தமிழில்

-- பிரதேச மொழியில்--தங்கு தடையற்ற வளர்ச்சியை உறுதியாகக் கோருகிறவர்களையோ காணமுடியவில்லை. எனவே, தமிழில் முடியும் என்று பேசிவந்த ராஜாஜி போன்ற நமது மதிப்பிற்குரிய தலைவர்களும், எனது மதிப்பிற்குரிய நண்பர் நெடுஞ்செழியன் போன்றவர்களும் தமிழைப் பின்னுக்குத் தள்ளி மறைக்கிறார்கள்.

 ஜாதி ஒழிப்பும், திராவிடக் கழகமும் 
"தோழர்களே ! இனி மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட

மற்றொரு முக்கிய தீர்மானமான, " ஜாதி ஒழிப்பும் திராவிடச்