பக்கம்:ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

38

யடிக்கத் தொடங்கினார்கள். அந்தக் குழையடிப்பு இன்றுவரையும் நிற்கவில்லை.

இவ்வாறு, அரசியலில் ஜாதீயத்தை, வகுப்பு வாதத்தைப்

புகுத்தும் ஜனநாயக விரோதமான போக்கை, காங்கிரஸ் மேலிடம் தெரிந்தே அனுமதித்து வந்திருக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சியை எடுத்துக் கொள்ளுங்கள்! சென்ற

பொதுத் தேர்தலில் ஒரிசாவில் நாங்கள் கணதந்திரப் பரீஷத்தோடு ஜார்கண்ட் கட்சியோடு, இத்தகைய வகுப்புவாதக் கட்சிகளோடு கூட்டணி வகுக்க ஒப்புக்கொண்டிருந்தால் காங்கிரஸ் கவிழ்ந்திருக்கும்; மந்திரி சபையில் எங்களுக்கும் இரண்டு இடங்கள் கிடைத்திருக்கும்.

வகுப்புவாதமற்ற ஒரே கட்சி

காங்கிரஸ் எதிர்ப்பைவிட, வகுப்புவாத எதிர்ப்பையே நாங்கள் பெரிதுபடுத்தினோம். எனவே அவர்களோடு நாங்கள் சேரவில்லை. மாறாக, எங்களை ஒழிக்க, கேரளத்தில் வகுப்பு வாத முஸ்லீம் லீகோடு காங்கிரஸ் கொஞ்சிக் குலாவுகிறது. இந்த ராஜ்யத்தில் எங்களைத் தோற்கடிக்க, தங்களுக்கு அதிக ஸ்தானங்கள் பெறவும் திராவிடக் கழகத்தின் ஜாதிவெறிப் பிரச்சாரத்தை அனு மதித்தது.

அன்பர்களே ! வகுப்புவாதத்துக்கோ, ஜாதீய வாதத்துக்கோ

கிஞ்கிற்றும் இரையாகாத ஒரு அரசியல் கட்சி அனைத்திந்தியாவிலும் இருக்கிறதென்றால், அது கம்யூனிஸ்ட் கட்சியே என்பதை நீங்கள் உணர வேண்டும்.

அரசியல் ஆதிக்கத்துக்காகவும், சுரண்டலை எதிர்த்து பொது

மக்கள் நடத்தும் போராட்டங்களில் உருவாகும் ஒற்றுமைக்கு உலை வைப்பதற்காகவும் பிற்போக்காளர்கள் ஜாதி வெறியைப் பயன் படுத்தி வருகிறார்கள், என்பது நமது நாட்டு ஜனநாயக இயக்கத்தின் நடைமுறையில் நாம் கண்ட அனுபவம்.

முதுகுளத்தூர் படிப்பினை
இதைப்போல், பதவிவேட்டை திருவிளையாடல்களிலும் ஜாதி

வெறியைப் படுமோசமாக உபயோகப்படுத்தி வருவதும் நாம் கண்கண்ட அனுபவம் என்பது உங்களுக்குத் தெரியும்.

ஜாதி வெறிவை அரசியல் ஆதிக்கத்துக்காக உபயோகப்படுத்தத்

தொடங்கினால், அது எத்தகைய பயங்கர விளைவுகளை உண்டு பண்ணும் என்பதற்கு முதுகுளத்தூர் சம்பவங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகள் என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.