பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

வட ஆற்காடு ஜில்லா

ஆதொண்டை மன்னன் குரும்பர்களை ஜெயித்ததும் இவ்வனப் பிராந்தியங்களில் ரிஷிகள் வசித்துவந்ததை யறிந்து காஞ்சீபுரம் முதலான இடங்களில் அனேகக் கோவில்களைக் கட்டி வைத்தானாம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அக்காடுகளில் பெரும்பாகம் அழித்துப் பயிரிட யோக்கியமானதாகச் செய்யப்பட்டது. இறுதியில் ஷடாரணியம் அல்லது ஆறுகாடென்ற அவ்வனப் பிராந்தியத்தின் பெயர் கர்நாடகத்தின் ராஜதானி நகருக் கிடப்பட்டது.

ஜில்லாவின் வடக்கு பாகம் வட ஆற்காடென்று கூறப்பட்டது. 1810-வது வருஷத்தில் கர்னாடகத்துடன் கம்பெனியாருக்குக் கொடுக்கப்பட்ட பாகம் பாலாற்றிற்கு வடக்கிலிருந்த பாகம் மாத்திரமே. அப்பாகம் “வடசுபா“ எனப்பட்டு வந்தது. பாலாற்றிற்குத் தெற்கிலுள்ள சுபாவின் பாகம் முதலில் ஆற்காட்டின் தென் பாகமென்று ஏற்பட்டது. இந்த ஜில்லாவின் பாகங்கள் அடிக்கடி மாறுபட்டுக் கொண்டு வந்தனவாம். இங்கிலீஷ் கம்பெனியார்களுக்குக் கொடுக்கப்பட்ட பிறகு வட பாகத்துடன் காளஹஸ்தி, கார்வேட்நகரம், வெங்கடகிரி, செய்தாபூர், கங்குந்தி முதலிய ஜமீன்தாரிகளும், பாரமஹாலிலிருந்து கிருஷ்ணகிரி என்ற பாகமும் மலைத் தொடர்ச்சிக்கு மேலாகவுள்ள ஹோசூரும் சேர்த்துக்கொள்ளப்பட்டன. 1808-வது வருஷத்தில் வெங்கடகிரி, சைதாப்பூர் முதலிய இடங்களும் காளஹஸ்தியின் ஒரு பாகமும் நெல்லூருக்கு மாற்றிக்கொள்ளப்பட்டுக் கங்குந்தி ஜமீன்தாரி, தற்காலத்திய பழமானேரி தாலூகா இவை நீங்கலாகக் கிருஷ்னகிரிப் பிரிவுகள் சேலத்துடன் சேர்த்துக்கொண்டு விடப்-