பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அத்தியாயம் 2
விசேஷ இடங்கள்

வேலூர் (Vellore) :-வட ஆற்காடு ஜில்லாவின் முக்கியமான ஊர்களில் ஒன்றாகிய வேலூர் ஒரு முனிஸிபல் நகரம். இதே வேலூரென்னும் பெயருள்ளதும் தென் ஆற்காடு ஜில்லா திண்டிவனம் தாலூகாவிலுள்ளது மான ஊரிலிருந்து இதைப்பிரிக்கவேண்டி அதற்கு உப்புவேலூர் என்றும் இதற்கு ராயவேலூரென்றும் பெயருண்டாயிற்று. உப்பு வேலூர் பண்டைய காலத்தில் ஓய்மாநாடு என்றும் ஏறுமாநாடு என்றும் வழங்கிவந்த தற்காலத்திய திண்டிவனத்தை சேர்ந்தது. நல்லியக்கோடன் எனப்படும் அரசன் காலத்தில் பகைவர்கள் வந்து அவனை எதிர்க்க, அவர்களைத் தோற்கடித்தது மன்னியில், அவர்களைத் துரத்தி தனது ராஜ்யத்தை சேர்ந்த உப்பு வேலூர் என்னும் பட்டணம் வரைக்கும் சென்றான் அவ்விடத்தில் இவ்வரசனது குலதெய்வமாகிய சுப்பிரமணியரது கிருபையால் ஒரு கிணற்றிலிருந்து புஷ்பரூபமாய் மாறியிருந்த ஒரு அம்பை எடுத்துப் பகைவரின் சைன்னியத்தின் பேரில் எறிய அவை பலவாகப் பரவி அவர்களை அழித்து விட்டதாம். பின்னர் நல்லியக்கோடன் தமது ராஜதானி சென்றான். இந்த யுத்தம் நடந்த இடத்திற்கு வேலூர் என்னும் பெயர் ஏற்பட்டது. இப்படி அகப்பட்ட புஷ்பம் வேல்போல் மாறியது பற்றியே!

இவ்வூர் இந்த ஜில்லாவிலேயே இருக்கும் ஊர்களுள் பெரிதென்பதுடன் ஜில்லாவின் பிரதான நகரமுமாகும்.