பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசேஷ இடங்கள்

41

டம் முதலியன உள்பிரதேசங்களிலும் எல்லைப்பிரதேசங்களிம் ஏற்பட்டிருக்கின்றன. நறுமணம் வாய்ந்துள்ள புஷ்பச் செடிகள் பயிர் செய்து புஷ்ப வியாபாரம் செய்தல் ஜனங்களின் முக்கியமான தொழில்களில் ஒன்று. ரயில் மார்க்கமாக இவைகள் ஏராளமாகச் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இவ்வூரில் முக்கியமானது கோட்டையும் அதற்குள்ளிருக்கும் கோவிலுமே. கோட்டையும் கோவிலும் தென் இந்தியாவில் ஏற்பட்டுள்ள சிற்ப வேலைகளில் சிறந்தது. (படம் 2) கோட்டையின் புராதன வாசல், சுற்றிச் சுற்றிப் போவதுடன் பலமான கதவுகளுடனும் ஒரு தூக்குப் பாலத்துடனும் கூடியிருந்த ஒரு ரஸ்தாவின் வழியாக ஏற்பட்டிருந்தது. ஆனால் சில வருஷங்களுக்கு முன் சுவரின் வழியாகவே ஒரு நேரான பாதை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தெற்குப் பக்கத்தில் ஒரு காலடிப் பாதை ஏற்பட்டுளது அது அகழியை ஒரு கருங்கல் அணை மார்க்கமாய்க் கடக்க ஏற்பட்டுளது. இக் கோட்டையின் அகழியைத் தாண்ட வேறு யாதொரு மார்க்கமும் இல்லை. இந்த அகழிக்கு ஜலம் வருவது "சூரிய குண்டம்" என்ற ஒரு பெரிய குளத்திலிருந்து. ஊருக்குக் கிழக்கிலுள்ள குன்றுகளிலிருந்து வரும் ஜலம் அதை நிரப்புகிறது. இந்த அகழியில் முன் அனேகம் பெரிய முதலைகளிருந்தனவாம். ஆனால் காலக் கிரமத்தில் அவைகள் நாச மடைந்தன. கோட்டையி லிருந்து வந்த உத்தியோகஸ்தர்கள் அவைகளைச் சுட்டுக் கொன்று விட்டார்களாம். பின்னர் 879-வது வருஷம் மார்ச்சு மாதத்தில் திரும்பவும் சில முதலைக் குட்டிகள் கொண்டுவந்து விடப்பட்டனவாம்.