பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

வட ஆற்காடு ஜில்லா

அவன் தோண்டி எடுத்துக்கொண்டு ஒரு கோவில் கட்டி முடிக்கவேண்டு மென்றும் கூறினாராம். புதையலிருந்து அகப்பட்ட இடத்தில் ஒரு சிவலிங்கமும் இருந்தது. பொம்பி ரெட்டியும் சிவபிரான் ஆக்ஞைப்படி கோவிலும் கட்டி லிங்கஸ்தாபனமும் செய்தான்.

கோவிலின் சுவர் ஏற்படவேண்டிய விடம் பொம்மி ரெட்டிக்குக் காட்டப்பட்டதும் ஆச்சரியமான ஸம்பவமே. ஒரு சமயம் இந்த பொம்மி ரெட்டியின் நாய்களை ஒரு முயல் துரத்திக் கொண்டு ஓட அவைகள் ஓடினமார்க்கம் அந்தப் புற்றைச்சுற்றி ஏற்பட்டிருந்தது. சிவபிரானும் ஆகாயத்திலிருந்து அசரீரியாக அவைகள் ஓடிய மார்க்கத்தை அநுசரித்துக் கோவில் சுவர்கள் ஏற்பட்டுக் கட்டப்பட வேண்டு மெனக் கூறியருளினார். சரியாக ஒன்பது வருஷகாலமாய் கோவில் கட்டி முடிவுபெற்று அதில் ஜலகண்டேசுவரர் ஸ்தாபிக்கப்பட்டார். இது நேரிட்டது 1274-ல். இந்த பொம்மி ரெட்டியின் மகன் வெங்கட்ட ரெட்டி 1398-ல் கோயில் கட்டிடங்களை விர்த்தி செய்தானாம். இக் கோயிலிலுள்ள மண்டபத்தில் தாமரை தளத்தை கிளிகள் கொத்துகிற மாதிரியும் அதைச்சுற்றி அஷ்டதிக்கு பாலகர்கள் பிம்பங்களும் வெகு நேர்த்தியாய் அமைக்கப்பட் டிருக்கிறது. இம் மண்டபத்திலுள்ள தூண்களும் அபூர்வ வேலைப்பாடுள்ளன. இந்த மண்டபத்தைப் பிரித்து இங்கிவீஷ்காரர் லண்டன் மா நகருக்கு எடுத்துப்போக எத்தனித்து பின்னர் அவ்வெண்ணத்தை விட்டு விட்டனராம்.

இக் கோவிலைக் கட்டிமுடித்த சில்பியினது மகன் அவனைத் தேடிக்கொண்டு வந்து அக்கோவில் கட்ட ஆரம்பித்த-