பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசேஷ இடங்கள்

51

னவர். முத்தம்மை என்னும் மாதுக்கு இவ்வூரி லுள்ள அருணகிரிநாதரின் அருளால் பிறந்த அருணகிரிநாதருக்கு ஈஸ்வர அனுகிரகத்தினால் மகிமை உண்டாயிற்று. தான் பால்யத்தில் செய்த குற்றங்களை நினைத்து நினைத்து நொந்து ஆண்டவன் சந்நிதியில் முறையிட்டனர். பின்னர் பல ஸ்தலங்களை தரிசிக்கச் சென்றனர். இப்படியாகச் சென்று பின்னர் திருவண்ணாமலையை அடைந்து திருச்செந்தூரிலும் திருப்பரங்குன்றத்திலும் தான் கண்ட அதிசயங்களை இவ்விடத்தில் காண வேண்ட அந்தப்படி தன்னுடைய பிரார்த்தனை நிறைவேறாததின் நிமித்தம் கோபுரத்தின் மேலேறிக் கீழேவிழுந்து உயிர் துறக்க எத்தனிக்கையில் சுப்பிரமணியர் இவருக்கு பிரத்தியக்ஷ மானார். அச்சமயம் இந்நாட்டை ஆண்ட பிரபுடதேவன் இவரை அலக்ஷியம் செய்யவே தன்னுடைய யோகபலத்தால் கிளி உருவெடுத்து அவ்வரசனுக்கு நேரிட்ட ரோகத்தைத் தீர்த்தனராம்! ஆனது பற்றியே இப்பொழுதும் கிளி உருவமாய் இவர் இவ்விடத்தில் முருகனைத் தரிசிப்பதாக ஐதீகம். இவரது திருப்புகழ் வெகு அழகான நூல்.

1753-வது வருஷத்தில் இவ்விடம் மூர்த்திஸ் அலிக் கான் என்றவனாலும் மொராரிராவ் என்ற மஹாராஷ்டிரத் தலைவனாலும் முற்றுகை செய்யப்பட்ட பொழுது கர்னாடக நவாப்புக்காக பார்க்கத் உல்லா கான் என்றவன் மிக்க சௌகரியத்துடன் இதைப் பாதுகாத்த விஷயம் சரித்திர சம்பந்தமான விஷயம். 1757-வது வருஷத்தில் பிரெஞ்சுக்காரர்களது வரவினால் ராணுவம் இவ்விடத்தை விட்டு அகன்று விட்டதாயும் 1790-வது வருஷத்தில்