பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

வட ஆற்காடு ஜில்லா

திப்பு இதைப் பிடித்துக் கொண்டதாயும் சரித்திரங்களில் ஏற்பட்டிருக்கிறது.

சோளிங்கபுரம் (Sholingur):-- வட ஆற்காடு ஜில்லாவின் முக்கியமான நகரங்களில் ஒன்று சோளங்கிபுரம். ஊருக்கு எட்டு மைல் தூரத்தில் பாணாவர மெனப்படும் இடத்தில் ஏற்படுத்தப்பட்டுளது சோளிங்கபுரம் ரயில்வே ஸ்டேஷன்.

இவ்வூருக்கு ஏற்பட்ட சோழலிங்கபுரம் என்ற ஆதிப் பெயரைச் சுருக்கிச் சோளிங்கபுரம் என்று அழைத்து வருகிறார்கள். ஒருகாலத்தில் சோழமன்னன் ஒருவன் இங்கொரு சுயம்பு லிங்க மிருக்கக்கண்டு, அதற்கொரு கோவில் கட்டி அக்கோவிலுக்கு சோழேசுவரர் கோவில் என்ற பெயரை இட்டனன். அதுவும் ஊரின் மத்தியில் இருக்கக் காணலாம்.

இங்குதான் முதல்முதல் தோற்றுப்போன ஆதொண்டை மன்னனுக்குக் குரும்பர்களுடன் மறுபடியும் சண்டை துவக்கும்படி கன வேற்பட்டதாம். சோளிங்கபுரம் ஒரு பெரிய ஊர் என்றதுடன் ஜனங்களுள் பெரும்பான்மையோர் வியாபாரிகள், நெசவுக்காரர்கள், வாணியர்கள் முதலானவர்களே. பிரதிதினமும் கடைகளில் நல்ல வியாபாரம் நடந்தேறுவதுடன் வாரச் சந்தைகளில் நல்ல வியாபாரம் நடை பெறும். இவ்வூருக்கு மஹிமை முக்கியமாய்க் கோவில் ஏற்பட்டதால் தான்.

இச்சோழேசுவரர் கோவிலைத் தவிர பக்தவத்ஸல. கோவில் என்ற இன்னொரு கோவிலும் இவ்வூரிலிருக்கிறது. இது விஜயநகர மன்னர் ஒருவரால் கட்டப்பட் டிருக்க-