பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசேஷ இடங்கள்

53

லாம். வேலூர், விரிஞ்சிபுரம் இவ்விடங்களிலுள்ள மண்டபத்தை ஞாபகத்திற்குக் கொண்டுவரக்கூடிய நேர்த்தியான மண்டபம் இக்கட்டிடத்திற்கு முன்பாகக் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. அஸ்திவாரத்துடன் முடிவு பெறாமல் நின்றுவிட்டது. ஏராளமான கொத்து செதுக்கு வேலை செய்யப்பட்டுள்ள கல்தூண்கள் பூமியில் புதைந்து கிடப்பதைக் காணலாம்.

இன்னும் இதர முக்கியமான கோவில்கள் ஊருக்கு வெளியே ஏற்பட்டுள்ளன. அவைகளுள் அதிக முக்கியமானது ஒரு உன்னதமான குன்றின் சிகரத்தில் கட்டப்பட்டுள்ள நரசிம்மசுவாமி கோவில். ராயோஜியினால் கட்டப்பட்ட படிகளை ஏறி உச்சியை அடைந்ததும். அங்கு மிக்க குளிர்ச்சி பொருந்தியந ல்ல காற்று வீசி ஆரோக்கியமாக இருக்கக்காணலாம். தவிரவும் அங்கிருந்து பார்த்தால் நேர்த்தியான குளங்களுடன் கூடிப் பயிர் செய்யப்பட்டுள்ள சமவெளியின் காட்சியும் தென்படும்.

திருப்பதி, காஞ்சீபுரம் இவ்விடங் களுக்குப் போகும் யாத்திரீகர்கள் இரண்டு மூன்று தினங்க இவ்வூரில் தங்கியிருந்து இங்குள்ள கோவிலில் சுவாமி தரிசனம் செய்து போகிறார்கள். சித்திரை மாதத்தில் இந்த சுவாமிக்கு ஒரு உற்சவம் நடைபெறும். இங்குள்ள குன்று பைரவேசுவரரது கட்டளையின் மேல் சமவெளியி லிருந்து கிளம்பி மேன் மேலும் உயர்ந்து கொண்டே வந்ததைக்கண்ட தேவேந்திரன் கோபம்கொண்டு பலராமரை அதை நிறுத்தும்படி கேட்க அவரும் அதை அழுத்தினாராம். அதன் பிறகு இப்பொழு திருக்கும் மட்டத்திலேயே நின்று-