பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

வட ஆற்காடு ஜில்லா

விட்டதாம்! இதன் அருகில் பதினான்கு புண்ணிய சிகரங்கலிருப்பதாகக் கூறப்பட்டிருக்கினும் மிகச் சிறந்தது இச் சிகரமேயாம்.

ராயோஜிப் படிகளின் அருகில் அவரால் ஏற்படுத்தப் பட்டுள்ள அன்னதான சத்திரம் ஒன்றுளது. முதலில் அவர் அந்த தர்மகைங்கரியம் நிறை வேறிவர பூமிமானியம் விட்டிருந்ததைக் கம்பெனியார் எடுத்துக் கொண்டு பிரதி வருஷமும் 1280-ரூபாய் கொடுத்து வந்தார்கள். இப் பொழுதும் அத்தொகை லோகல் பண்டாரால் செலவிடப் பட்டுவருகிறது. யாத்திரிகர்கள் இரண்டொரு தினங்கள் தங்கினால் அவர்களுக்கும் இங்கு சாதம் கிடைக்கும். கார்த்திகை மாதத்திய ஞாயிற்றுக்கிழமை தினங்களில் ஊரிலுள்ளவர்களுக்கு இங்கு அன்ன மளிக்கப்படும். கைங்கரியங்களுக்காக ஏற்பட்டிருக்கும் ஆள்களுள் ஒரு பூசாரியும் உண்டு. அவன் பிரதிதினமும் இதை ஸ்தாபித்தவர் பேரால் அர்ச்சனை செய்து வருவான். அவரது ஸாலிக் கிராமங்களும் இங்கு வைக்கப்பட் டிருக்கின்றன. இச் சத்திரத்திற் கருகில் ஒரு ஆழமான கிணறு உண்டு. அதன் ஆழம் கோவில் எவ்வளவு உயரமோ அவ்வளவு என்று கூறுவதுண்டு. அதை ராயோஜி தமது பணச்செலவில் வெட்டி வைத்தாராம்.


கிழக்காகவுள்ள இன்னொரு குன்றில் கிழக்கில் ஆஞ்ச- நேய சுவாமி கோவில் ஒன்றுளது. பக்கத்துக் கோவிலைப் போல அவ்வளவு சிறந்ததாகக் கட்டப்பட் டிராவிடினும் மிகப் பிரக்கியாதி பெற்றது. பேய் பிடித்துள்ள ஸ்திரீகள் அதன் உபாதி நீங்க இக்கோவிலுக்குக் கொண்டு வரப்படு-