பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசேஷ இடங்கள்

55

வார்கள். இந்த ஆஞ்சநேயரது மகிமையால் சோளிங்கபுரத்திற்கு வருபவர்கள் இவரது ஆலயத்திற்குப் போகாமல் திரும்பிப் போவதில்லை. குன்றில் ஏறுகையில் பாதி வழியில் உள்ள ஊற்றில் ஸ்நானம் செய்துவிட்டுப் பேய் பிடித்துள்ளவர்கள் கோவிலுக்குட் சென்று மூர்த்தியின் முன்பாக உட்காருவார்கள். பிறகு அவர்கள் தலை விரித்தாட ஆரம்பிப்பதுடன் கீழே விழுந்து புரளுவதுமுண்டு. இரண்டொரு மணி நேரம் அவர்கள் புலம்புவார்கள். பின்னர் அவர்கள் மீது புண்ணிய தீர்த்தம் தெளிக்கப்படும். அவர்களும் பிரக்ஞையற்றுக் கிடப்பார்கள். பிரக்ஞை வந்ததும் அவர்களது சாதாரண இயற்கை நிலைமையும் வந்து விடும். பிசாசு நீங்குவதுடன் இன்னும் அனேகம் வியாதிகளும் இங்கு நீங்கி விடுமாம்! நோயாளிகள் அல்லும் பகலுமாக இரண்டொரு மாதம் இக்கோவிலிலேயே கிடந்து சுவப்நத்தில் கடவுள் அனுமதி பெற்றபிறகு தான் அங்கிருந்து அகல்வது வழக்கம்.

இச் சோளிங்கபுரத்தைச் சுற்றி அனேகம் தீர்த்தங்களும் இருக்கின்றன. அவைகளுள் முக்கியமானது பிரம தீர்த்தம் என்றது. அதில் ஜனங்கள் வியாழக்கிழமை தினங்களில் ஸ்நானம் செய்வது வழக்கம். ஒரு சமயம் பரமசிவன் பிரம்ஹாவின் ஐந்து தலைகளுள் ஒன்றைச் சேதித்துவிட அவர் இங்கு வந்து அந்தத் தலை மறுபடியும் வளரும்வரை தவம் செய்தாராம். மந்தராபுர மன்னன் இந்திரத்துயும்னன் சில ராக்ஷசர்களுடன் போர் புரிந்த பொழுது விஷ்ணு ஆஞ்சனேய சுவாமியை அவருக்கு உதவி புரியுமாறு அனுப்பினாராம். பிறகு ஆஞ்ச-