பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசேஷ இடங்கள்

57

அதற்கொரு கோவில் கட்டி வைத்தனன். அதனால் நோய் நீங்கின காரணம்பற்றி அவ்விடத்திற்கு வந்தவாசி அதாவது ரோகம் வாசியாகி வந்த இடமென்ற பெயரை இட்டனராம். கல்லும்போது பாறைப்பட்டு நேர்ந்துள்ள குறி இப்பொழுதும் இந்த லிங்கத்தில் காணப்படும்! இவ்வூர் மத்தியிலுள்ள ஒரு சிறு குன்றின் பேரில் ஏற்பட்டிருக்கும் கோவில் விசேஷ பிரக்யாதி பெற்றது.

சரித்திர சம்பந்தமாக இவ்விடம் பெயர் பெற்றது. கர்நாடக முகம்மதியர்களது ராஜாங்கத்தில் ஏற்பட்டிருந்த முக்கியமான ராணுவ ஸ்தலங்களில் இது ஒன்றாக ஏற்பட்டிருந்தது. இப்பொழுதும் இவ்விடத்தில் அனேகம் முகம்மதியர்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள கோட்டையைக் கட்டியது மஹாராஷ்டிரர்களாக விருக்கலாம். அது பேட்டையென்று கூறப்படும் ஊருக்கு வடக்கிலிருக்கிறது. அதுவும் கூட உயரமான சுவர்களால் பந்தோபஸ்து பண்ணபட்டிருந்த தென்பதற்கு இப்பொழுதும் அடையாளங்கள் இருக்கின்றன. தென்கிழக்கு மூலையைத் தவிர மற்ற இடங்களில் இது ஒரு அகழியால் சூழப்பட் டிருக்கிறது. அம்மூலையில் பல பீரங்கிகள் ஏற்றப்பட்டு வெடிமருந்து முதலியன சேகரித்து வைக்க இடங்களும் வாய்ந்திருக்கின்றன.

கர்னாடக யுத்தத்தில் அதிகமாகச் சண்டை நடந்த இடம் இந்த வந்தவாசியே. 1752-வது வருஷத்தில் இக் கோட்டை மேஜர் லாரென்ஸ் என்றவரால் தாக்கப்பட் டது. ஆனால் அவர் மூன்று லக்ஷம் ரூபாய் விடுதலைப் பணம் பெற்றுக் கொண்டு சென்று விட்டனராம்.