பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசேஷ இடங்கள்

59

தில் குரும்பர்களது வமிசத்திய ராஜதானிப் பிரதான நகரமாக இருந்தது. இவ்வூர் அப்பொழுது பதினாறு சுற்றளவு மைல் வாய்ந்து கோவில்களுடனும், சத்திரங்களுடனும் ஜனங்களது நேர்த்தியான வீடுகளுடனும் விளங்கிக்கொண்டிருந்தது. மண் கல் மாரியினால் இந்நகரம் மூடிவிடப்பட்தாக நினைக்கிறார்கள். புராதன நகரமிருந்தவிடம் கா டடர்ந்துளது. இவ்வூரிலுள்ள கோயில்களுள் ஒன்று ரேணுகாம்பாள் கோவில். மற்றது ராமஸ்வாமி கோவில். ரேணுகாம்பாள் கோவில் விசேஷமானது. ஆடி வெள்ளிக் கிழமை தினங்களில் ஏராளமான ஜனங்கள் இக்கோவிலுக்கு வருவது வழக்கம். இந்த ரேணுகாம்பாள் ரைவத ராஜன் என்ற மன்னனின் குமாரி அவள் தனது தந்தையின் அனுமதியின்மேல் ஒரு சைனியத்துடன் ஒரு தக்க புருஷனை நாடிச் செல்லுகையில் இப்படைவீட்டுக் குன்றுகளுக்கு வடக்கில் தங்கினாள். அப்பொழுது ஒரு அசரீரி வாக்கு அக்காட்டில் நதிக்கருகில் வசித்துக் கொண்டிருந்த ஜமதக்கி ரிஷியே அவளுக்குத் தக்க புருஷனெனக் கூறிற்றாம். சைனியத்துடனும் மாந்திரீகத்தில் சாமார்த்தியம் வாய்ந்திருந்த சாமுண்டி யென்ற சேடியுடனும் அவரைத் தேடிக் கொண்டு சென்றாள் அவ்வரச குமாரியும். இவர்களது வரவால் கோபம் கொண்ட ஜமதக்கியும் தனது மந்திர சக்தியால் சைனியங்களை சிருஷ்டித்தனுப்ப அவைகளைச் சாமுண்டி தனது நேத்திராக்கியால் தகிக்க ஆரம்பித்தாள். ஜமதக்கி ரிஷியும் எப்பொழுதும் குறையாத ஜலம் நிறைந்திருக்கும் சக்திவாய்ந்துள்ள தனது சுமண்டல் ஜலத்தை அவ்வக்கியை அணைக்க உபயோகிக்க அது படை-