பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

வட ஆற்காடு ஜில்லா

வீடு அல்லது கமண்டல நதியாக ஏற்பட்டதாம். வெகு காலம் போராடிய பிறகும் அனேகம் படைகள் வெட்டப்பட்ட பிறகும், சாமுண்டி பிடித்துப் புஷ்பமாலையால் கரையில் கட்டிப் போட்டுவிடப் பட்டாள். சாமுண்டேசுவரியினது கோவில் அதே இடத்தில் கட்டப்பட்டிருக்கிறது படைகள் வெட்டுப்பட்ட காரணம்பற்றி இவ்விடம் படை வீடு என்ற பெயர் வாய்ந்ததாம்.

தான் வந்தது கலியாணம் செய்து கொள்வதற்கே ஒழியச் சண்டைபோட அல்லவென்றதை உணர்ந்த ரேணுகாம்பாளும் தனது சைனியத்தைத் திருப்பியழைத்துக் கொண்டு இன்பமாய் மிருதங்கம் வாசிக்க ஆரம்பித்தாள். இதைக் கேட்டு அங்கு வந்த ஜமதக்கியும் அவளைத் தொடர்ந்து சென்று அவளைக் கலியாணம் செய்து கொண்டார். இது நேர்ந்தது ஆடி மாதத்தில். ஆதலால் அந்த மாதத்திய வெள்ளிக் கிழமைகளில் விருந்து முக்கியமாய்க் கொண்டாடப்படுவது வழக்கம்.

கொஞ்ச காலத்திற்குப் பிறகு தம்பதிகளுக்கு ஒரு புத்திரன் பிறக்க அவனுக்குப் பரசுராமனென்ற பெயரை இட்டார்கள். அக்குழந்தையும் மிக அற்புதமான குழந்தையாக ஏற்பட்டது. ரேணுகாம்பாளும் ஒரு உத்தமமான மனைவியாக ஏற்பட்டிருந்தாளாம். அவள் மஹாபதிவிரதா சிரோன்மணியாக ஏற்பட்டு ஸதா தனது புருஷனையே தெய்வமாக நினைத்துக் கொண்டிருந்த காரணம் பற்றி அவளிடம் அபாரமான அத்புத சக்தி ஏற்பட்டிருந்தது. அவள் வெறுங்கையோடு 'பத்ம ஸரஸ்' என்ற சுனைக்குப் போய்த் தனது சக்தியால் ஜலத்தையே ஒரு குடமாகச்