பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வட ஆற்காடு ஜில்லா

பூர்வ பீடிகை
(அமைப்பு முதலிய விவரங்கள்)

சென்னை ராஜதானியின் ஜில்லாக்களுள் ஒன்றாகிய ஆற்காடு ஜில்லா (படம் 1) 4,954-சதுர மைல் விஸ்தீரணம் வாய்ந்துள்ளது. இதற்கு வடக்கில் சித்தூர் ஜில்லாவும் மைசூர் ராஜ்யமும் எல்லையாக ஏற்பட்டிருக்கின்றன. கிழக்கிலுள்ளது செங்கற்பட்டு ஜில்லா. இதன் தென் பக்கத்திய எல்லைகள் தென் ஆற்காடு ஜில்லாவும், சேலம் ஜில்லாவின் ஒரு பாகமும். மேற்கிலுள்ள எல்லை சேலம் ஜில்லாவும், மைசூர் ராச்சியமும், இதன் எல்லைக்கரை ஓரம் நன்கு ஒழுங்கு வாய்ந்திருக்கவில்லை. மேற்கில் மைசூர்ப் பூமியின் ஒரு பாகம் அடங்கியுள்ளதாக விருக்கிறது. இப்பொழுது இந்த ஜில்லா ஒன்பது தாலூகாக்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அவையாவன :—

(1) வேலூர்
(2) திருப்பத்தூர்
(3) குடியாத்தம்
(4) வாலாஜாபேட்டை
(5) அரக்கோணம்
(6) செய்யாறு
(7) வந்தவாசி
(8) போளூர்
(9) திருவண்ணாமலை