கொள்கைப் பிடிப்பு இந்தப் பாட்டு 1934-ம் ஆண்டு இறுதியில் பிறந்தது. கொள்கை வீரனான காதலன், அன்பின் வடிவான தனது காத லிக்குக் கொள்கைப் பிடிப்பின் தன்மையை மிகத் திறம்பட, ஆணித்தரமாக எடுத்துக் கூறும் பாடல் இது. தொழிலாளர் உரிமைக்காகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பிற் காகவும். சமதர்ம முழக்கத்திற்காகவும், பற்பல பழிப்புக்கும் இழிப்புக்கும், துப்பாக்கிப் பிரயோகத்திற்கும் கொடிய மரணத் திற்கும் இரையாக வேண்டியிருந்த அந்த நாட்களில், பலப்பல வீரர்களை, காதலிகளின் கல்லையும் கரைக்கும் கனிவுமிக்க டைவிடா வேண்டுகோள்களில், கொள்கைப் பிடிப்புத் தளர்ந்து போகாது தடுத்தாட்கொண்ட பின்னர் இது 'ஜனசக்தி'யிலும் வெளிவந்தது. ஜீ-3 காதற் கனிரசமே - எந்தன் கண்மணியே பூங்குயிலே சாதலும் கற்கண்டடி - சம தர்மயுத்த வீரன்என்றே அச்சம் அவநம்பிக்கை - பழிப் பார்ந்தசுய நன்மையெல்லாம் துச்சமாய்த் தள்வோமடி - வீரம் சூழ்துணிவு கொள்வோமடி உற்றார் உறவினர்கள் - சொந்த ஊர்ஜனங்கள் நேசர்களும் பாட்டு கற்றாரும் தூற்றினாலும் - கொள்கை கைவிடுவ தெண்ணோமடி 33 (காதற்) (காதற் )
(காதற் )
33