இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுத்த சமதர்மம் சுத்த சமதர்மம் ஓங்க வேண்டும் தொழிலாளர் துன்பங்கள் நீங்க வேண்டும் எத்தும் புரோகிதம் சாக வேண்டும் இன்பவிஞ் ஞானம்உண் டாக வேண்டும் பஞ்சை பனாதிகள் பாடு பட்டார் பணக்காரப் பாவிகள் தின்று விட்டார் கஞ்சிக்குக் கெஞ்சி அழுது கெட்டார் கடவுள் அரசர்கை விட்டு விட்டார் மன்னன் பலத்தாலே கொள்ளை யிட்டான் மதக்குரு சூழ்ச்சியால் கொள்ளை யிட்டான் பின்னும் இத் தெய்வங்கள் கொள்ளை யிட்டால் பிழையுண்டோ நாஸ்திகப் பட்டம் தொட்டால்? சட்ட திட்டங்கள் சமூகத் திற்கே தலைவிரித் தாடின அவை எதற்கே கஷ்ட நஷ்டங்கள் உறுவ தாலே கண்யமில் லைஇப் பிறப்பி னாலே ரத்தம் கொதித்திட வேண்டும் தோழா நரம்பு முறுக்கேற வேண்டும் தோழா சித்தம் துணிந்திட வேண்டும் தோழா ஜீவானந்த வெற்றி காண்பாய் தோழா 40 (சூத்த) (சூத்த) (சுத்த) (சுத்த)
(1935)
40