உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயகாந்தன் சிறுகதைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

40 ஜெயகாந்தன் சிறுகதைகள் "சரி.. நான் சமாளித்துக் கொள்கிறேன். ஓ. கே!..." "நைன் தர்ட்டி...எஸ்! ஓகே!" டோண்ட் ஒரி !....." வாட் ஆர் யூ டாக்கிங்..." பை... சம்பாஷணை முடிவடைகின்ற தருவாயில் வேணு அறையிலிருந்து நழுவி வெளியேறிவிட்டான். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு இன்றுவரை அவன் அவர் முகத்தில் விழிக்கவில்லை. ஒரே வீட்டில் இருந்தும் மிக சாமர்த்திய மாக அவர் கண்ணில் படாமல் அவன் தப்பித்துக் கொண்டிருந்தான். சில நாட்களுக்கு முன் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் அவன் மாடியில் உள்ள தன் தந்தையின் தனியறைக்குச் சென்றான்; தனது ஐயத்தை உறுதிப்படுத்திக்கொள்ள அவனுக்கு மேலும் சில தூப்புகள் தேவைப்பட்டன. மாற்றுச் சாவிகள் போட்டு அவரது மேஜை, அலமாரி முதலிய வற்றைத் திறந்து துருவினான். அவ்விதம ஒரு திருடனைப் போல் நடந்து கொள்வதில் அவனுக்கு அவமானமேதும் ஏற்படவில்லை அதனினும் பெருத்த அவமானத்துக்கு அவனை ஆளாக்கத்தக்க சில துப்புகள் கிடைத்ததால் அந்தத் தனது காரியம் சரியே என்று அவன் நினைத்தான். "நான் ஏன் பயப்படவேண்டும்? தப்பு செய்கிற அப்பாவைக் கண்டு நான் ஏன் ஒளிய வேண்டும் ?... இதைப் பற்றி அவர் புத்தியில் உறைக்கிற மாதிரி நான் எடுத்துக் கூறி அவரைத் திருத்த வேண்டும்....இது என் கடமை... எப்படி எங்கே அவரிடம் இதைப் பற்றிப் பேசுவது? .. வீட்டில் பேசினால் அம்மாவுக்கு விஷயம் தெரிந்து போகுமே!... அவரை வெளியில் எங்காவது சந்தித்துப் பேச வேண்டும்...என் பேச்சை அவர் ஏற்றுக் கொள்ளாவிட்டால்?... அதைப் பற்றிப் பிறகு யோசிக்கலாம். முதலில் தைரியமாக இது விஷயமாய் அவரிடம் உடைத்துப் பேசி விட வேண்டும். ' என்று இரவு பகலாய் இந்த விவகாரம் குறித்து நெஞ்சு பொருமி, நினைவு குழம்பி இறுதியாக நேற்று அவன் ஒரு தீர்மானத்திற்கு வந்தான்.