பக்கம்:ஜெயரங்கன்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

or. A TE

பூனக்குக் கோபம் வந்தால் புலியையும் எதிர்க்கும்

ஸ்ரீனிவாசலு:-அப்பேர்ப்பட்ட மூர்க்கன் விட்டில் உனக்கு வேலை என்ன?

பாலாங்கன்:-வேலையில்லாமலா வருவேன். வேலை விருப்பு. தால் தான் வந்தேன்.

ஸ்ரீனிவாசலு:-என்ன வேலை?

பாலரங்கன்-ஜெயலக்கிமியைப் பார்க்கும் வேலை.

ஸ்ரீனிவாசலு-மூர்க்கன் விட்டுக் ‍ழந்தையைப் பார்க்கப்பிச் மேயமென்ன?

பாலரங்கன்-விவாகம் செய்து கொள்ள.

என்றதும் யாரை விவாகம் செய்து கொள்ள?) ஜெயலகதிமி பையா அடமானிடப் பதரே! சொல்லுகிறேன் கேள். இந்த திணி வாசலுவின் சம்மதத்தின் பேரில் எங்காளும் ஜெயா உன்னைக் கலியா னம் செய்து கொள்ளமாட்டாள். பிடிவாகம் பிடித்தால் இக் கொசுவை கசுக்குவதைப் போல் உன்னை நசுக்கிக் கொன்று விடு வேன். விண் ஆசையை விட்டுவிட்டு இப்போதே வெளியே போய் விடு; என்றார்,

பாலாங்கன்:-தாத்தா! தங்கள் சம்மதம் கேட்காமலே செய்து கொண்டால் என்ன செய்வீர்கள்?

ஸ்ரீனிவாசலு:-என் ஆஸ்தி முழுவதையும் அவளுக்கு ஒயில் சாசனம் செய்து வைத்திருக்கிற விஷயம் எல்லோருக்கும் தெரியும், என் அனுமதியில்லாமல் அவள் கலியாணம் செய்து கொண்டால் அன்றே என் ஆஸ்திக்கும் அவளுக்கும் எவ்வித சம்மக்கமில்லை யென ஒயில் மாற்றி எழுதி விடுவேன்.

பாலரங்கன்-தங்கள் ஆஸ்திக்காக ஆசைப்பட்டுக் கலியாணம் செய்து கொள்வதாகில் அதைப் பற்றி சிந்தனையடைய வேண்டும். தங்கள் ஆஸ்தியைத் தாங்களே வைத்துக் கொள்ளுங்கள். தயவு செய்து என் ஜெயாவை மட்டும் எனக்குத் தாருங்கள்.

பூந்னிவாசலு:-அது ஒருநாளும் தடவாத காரியம், ஏன் இந்த விண் ஆகாய மாளிகை கட்டுகிறாய்? அவளை ஒருநாளும் உனக்குக் கொடுக்க மாட்டேன். இது முடிவான வார்த்தை. இனி போய்விடு.

பாலரங்கன்:-ஜெயலகதிமி என்ன விவாஹம் செய்துகொள்வ தாக முன்ன்மே வாக்களித்திருக்கிருள். நானும் அவளை யல்லாமல் இன்குெருவரை விவாஹம் செய்து கொள்வதில்லை யென்று. பிாதிக்ஞை செய்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/122&oldid=632980" இலிருந்து மீள்விக்கப்பட்டது