பக்கம்:ஜெயரங்கன்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீஸ் விசாரணை 133

(5) இன்னும் சரியாய் அறை முற்றிலும் தேடியதில் ஸ்ரீனிவாசலு ராஜ கையெழுதிடும் பேணு ஒரு பக்கத்தில் அதிக வேகமாய் கீழே விழுந்தால் எவ்வாறு முனை மழுங்கியிருக்குமோ அவ்வாறு பேணுவின் முனே மழுங்கியும் விழுக்கிருந்தது!

(6) மேஜையின் மேல் ஸ்ரீனிவாசலுராஜூவின் பாங்க் தெரிசன உண்டியல் புஸ்தகக்கில் (செக்புஸ்தகத்தில்) கிழித்துக் கொடுத்தி ருந்த பாதி காகிதங்களிலெல்லாம் இன் குருக்கு இவ்வளவு தொகை எந்தத் தேதியில் கொடுக்கப்பட்டதென்று குறிப்பிட்டிருக்க கடை சிக் காகிதத்தில் மட்டும் அவ்விவரங்கள் ஒன்றும் எழுதப்படாமல் காலியாயிருந்தது.

- அவைகளை யெல்லாம் குறித்துக் கொண்டு.அப்பாலும் தேடிய தில் மாமூலாயிருக்கும் வஸ்துக்கள் ங்ேகலாக வேறு விசேஷ மானவை ஒன்றும் அகப்படவில்லை. அத்துடன் தேடுவதை நிறுத்தி க்கொண்டு ஆட்களை விசாரிப்பதாய்த் தீர்மானிதது முதலில் ஸ்ரீனி வாசலு ராஜூ அவர்கள் கூப்பிடும் போதெல்லாம் ‘ஏனென்று'கேட் கும் சொள்ளமுத்துத் தேவனக் கூப்பிட்டார்கள். அவ்ன் வந்ததும், இன்ஸ்பெக்டர்-சொள்ள முத்துத் தேவரே! இப்போது எஜ மான் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் நீர் உண்மையான பதில் சொல்லவேண்டும் தெரியுமா?

சொள்ளமுத்து:--எனக்கொன்றும் தெரியாது. ஜெயம்மா அழுத உடனே போனேன். அப்போ எசமான் செத்துக் கெடந்தா ங்க, அம்மட்டுதான் அடி மெக்குத் தெரியும். சத்தியமா வேருெ ண்ணும் தெரியாது.

இன்ஸ்பெக்டர்:-தேவரே! உமக்குத் தெரியுமென்று யாரும் சொல்லலே; எஜமான் கேட்கும் கேள்விக்கு மட்டும் உண்டு இல்லை யென்று உண்மையாய்ச் சொல்லும், அவ்வளவு போதும்,

சொள்ளமுத்து-அதுக்கென்னங்க தெரிஞ்சதைச் சொல்லிட் ாேனுங்க.

டேப்டி மாஜிஸ்டிரேட்-இன்ஸ்பெக்டர் தங்களே விசாரியுங் கள். அவ்சியமானபோது நாங்கள் விசாரிக்கிருேம்.

இன்ஸ்பேக்டர்:-கேற்று நடந்த சங்கதிகளை ஒன்றும் ஒளியா மல் சொல்லு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/138&oldid=632996" இலிருந்து மீள்விக்கப்பட்டது