பக்கம்:ஜெயரங்கன்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீஸ் விசாரணை 147

டேப்டி மாஜிஸ்டிரேட்-பிள்ளை அவாள்! இன்னும் விஷயங் களே ஆராய்ந்தறியுமுன் உம்மை சிறைச்சாலைக்கணுப்ப கான் விரும்ப வில்லை. ஆயினும் நீர் அனுமானப்பட்ட நபர்களில் ஒருவராகக் கருதப்படுகிறீர் என்பதையும் மறைப்பதற்கில்லை.

காந்திமதி:-ஆளுல் என்னை யல்லாமல் தாங்கள் மற்றவர்கள்பேரி லும் சந்தேகப்படுகிறீர்கள் போலிருக்கிறது.

டேப்டி மாஜிஸ்டிரேட்-இருக்கலாம்; அதைப்பற்றி உமக் கென்னசி சரி, ஜெயலகதிமியம்மாளே அழைத்து வாருங்கள் அத்தம் மாளைக் கேட்போம்.

என பாலாங்க ராஜ-யிடம் சொன்னர், காந்திமதி:--குழைந்தைக்கு என்ன தெரியும்? அது மைனர் அதை விசாரிப்பதில் என்ன உபகாரம்?

டெப்டி மாஜிஸ்டிரேட்-ஜெயலக்கிமி குழந்தை என்பதை நான் நன்குணர்வேன். அது விபரம் தெரிந்த மைனாாதலாலும் அது உண்மையை ஒளிக்காமல் சொல்லுமென கான் அபிப்பிராயப் படுவ தாலும் அதை விசாரிப்பது அவசியம். அதைப்பற்றி உமக்கென்ன? நீர் இனி பேசக்கூடாது. -

காந்திமதி:-சிறு குழந்தையைக் கூப்பிட்டு அதை இதைக் கேட்டு அது தெரியாத்தனமாய் ஏதாவது சொன்னல் அதைப் பிடி த்துக் கொண்டு அதன்பேரில் குற்றம் சாட்ட உத்தேசிப்பதை நான் ஆட்சேபிக்கிறேன். - டெப்டி மாஜிஸ்டிரேட்-எங்களுக்குத் தெரியாத நியாய அகியா யமும் சட்டமும் உமக்குத் தெரியும்போலிருக்கிறது. வாயை முடிக் கொண்டு உமது வேலையைப் பாரும்.

என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே பாலாங்கராஜா சென்று ஜெயலகதிமியை அழைத்து வந்தார்.

காந்திமதி:-அம்மா குழந்தாய் உன்னே ஏமாற்றி இவர்களெல் லாம் பேச்சி வாக்கில் நீ சொல்லும் வார்த்தைகளைக் கொண்டு தோன் உன் காத்தாவைக் கொன்றதாகக் குற்றம் சாட்டக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதுகேட்டாலும் ஒன்றுக்கும் பதில் சொல்லாதே. அவர்கள் என்ன வேண்டுமானுலும் செய்யட் டும் பயப்படாதே.

ஜெயலக்ஷ்மி-மாமா! அவர்களெல்லாம் கெளரவமான உத் யோகஸ்தர்கள்; என்னே ஏமாற்றுவதில் அவர்களுக்கு என்ன லாபம்? மேலும் கலெக்டர் அத்தான் இல்லையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/152&oldid=633012" இலிருந்து மீள்விக்கப்பட்டது