பக்கம்:ஜெயரங்கன்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரும் விதி இராத்தங்காது 157

வரோ வயமுெட்டிப்போய், கருத்த தேசத்துடன் பலமான காற் றடித்தால் கூட விழுத்துவிடக்கூடிய அவ்வளவு பலஹமீனாய் இருக் தார். டெப்டி மாஜிஸ்டிரேட்டிடம் கோவிந்தன் அவரைக் கொண்டு வந்து கிறுத்தி இவர் தான் சீதாராம சாஸ்திரிகள் எனச்சொன்னர். அங்கிருந்த அவ்வூர் போலீசார் யாரையோ பிடித்துக் கொண்டு வந்து சீதாராம சாஸ்திரியென எவரோ விட்டு விட்டார்கள். அவ ருக்கு சீதாராம சாஸ்திரி இன்னரென முன் பின் தெரியாததால் ஏமார்த்து எவரையோ பிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள் என ஏளனமாய் பேசிக் கொண்டார்கள். ஆனல் டெப்டி மாஜிஸ்டிரேட் டவர்களுக்கு கோவிந்தன் அவ்வாறு விசாரித்தறியாமல் பிடித்துக் கொண்டு வரமாட்டாரென்று கிட்டமாய் தெரியுமாதலால் சாஸ்திரி களைக் கண்டதும் சாஸ்திரிகளே வாருங்கள்” என்றார், சாஸ்திரி ஒன்றும் பதில் சொல்லாது மெளனமாயிருந்தார். போலீசாருக்கு சந்தேகம் இன்னும் அபிவிருத்தியாயிற்று. அப்போது டெப்டி மாஜிஸ்டிரேட் அவரைப் பார்த்து உமது பேரென்ன வென்றார், ‘ஜே சீதாராம்” என்றார், அப்பால் பல கேள்விகளைக் கேட்டதற்கு *ஜே சீதாராம்-ஜே சீதாராம்” என்று சொல்லிக் கொண்டிருக் தாரே தவிர வேறு பதில் சொல்ல வில்லை. யாரோ ஒருவன் ஒரு கோஷாயியை சீதாராம சாஸ்திரிகளெனப் பிடித்துக் கொண்டு வந்த தாகவும் அவனே என்ன கேட்டாலும் ஜே சீதாராம், ஜெ சீதாராம் எனப் பதிலளிப்பதாயும் கேள்விப்பட்ட போலிஸ் இன்ஸ்பெக்டர் உடனே அங்கே வந்தார். தன்னுடன் அவரை போலிஸ் ஸ்டேஷ லுக்கு அனுப்பி வைத்தால் தான் அவரைச் சேட்ட கேள்விகளுக் குப் பதில் சொல்லும்படி செய்து கொண்டு வருவதாக இன்ஸ் பெக்டர் சொன்னர், டெப்டி மாஜிஸ்டிரேட்டவர்களுக்கு அவ்வாறு அனுப்ப இஷ்டமில்லை. அவரைப் பேசும்படி செய்வதற்கும் முடிய வில்லை. இன்னது செய்வதெனத் தெரியாமல் கிகைத்துக் கடைசி யாக கோவிந்தனைப் பார்த்து இவரைப் பேசும்படி செய்வதற்கு ஏதா வது மார்க்கமில்லையா எனக் கேட்டார். டெப்டி மாஜிஸ்டிரேட்டவர் களிடம் இரகசியமாய், ஜெயலகதிமியம்மாளைக் கண்டால் கட்டாயம் அவர் பேசுவார் என்று கினைக்கிறேன். என்று சொன்னுர். அவர் தாகியைக் கூப்பிட்டனுப்பி ஜெயலகதிமியை அழைத்து வரச் சொன்னர் ஜெயலக்ஷ்மியும் பாலாங்க ராஜூவுமாக வக்த்ார்கள். அவர்களிருவரும் ஏகோபித்து வருவதைக் - கண்ட கோஷாயி ஜெய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/162&oldid=633023" இலிருந்து மீள்விக்கப்பட்டது