பக்கம்:ஜெயரங்கன்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரும் விதி இாாத்தங்காது 9

உட்கார வைத்துக் கொண்டு கடத்தேறிய விஷயங்களை விவாமாய்ச் சொல்லிக் கொண்டே வந்தார். அவரும் கவனமாய்க் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். அவர் சொல்லி முடித்ததும் சீதாராம சாஸ்திரி தாங்கள் யார்’ என்று கேட்டார். அவர் தான் இன்கு ரெனச் சொன்னதும் கவிதால சத்தியவந்தனுகிய அரிச்சந்திரனுக் குச் சமானமானவரென்று பேரெடுத்த கனவான் தாங்கள் தான? எனக் கேட்டு அவர் காலில் விழுந்து வணங்கினர்.

டெப்டி மாஜிஸ்டிரேட்-தர்ம பிரபுவாகிய ரீனிவாசலு ராஜா காரின் பிரேதம் காணுமற் போயிருக்கிறது. அதைக் கண்டு பிடித்து ஆசாரப்படி தகனம் செய்ய வேண்டி யிருக்கிறது. தங்கள் உதவி யிருந்தால் ஜல்தியாய்க் கண்டு பிடிக்கக்கூடும். -

சாஸ்திரி-எனக்கு அது சம்மந்தமான விஷயங்கள் ஒன்றும் தெரியாமலிருக்கும்போது என்னல் என்ன உதவி செய்யக்கூடும்?

டேப்டி மாஜிஸ்டிரேட்:-தாங்கள் எந்த வழியாய் அவர் அறை க்கு அன்றிரவு சென்றீர்களென்று விவரமாய்த் தெரிவித்தால் அதன் மூலமாய் பிரேதத்தைக் கண்டுபிடிக்கக்கூடுமென நம்புகிறேன்.

என்றார் சாஸ்திரி டெப்டிமால்டிரேட் அவர்களை மட்டும் தனியாய் பக்கத்தறைக்கு அழைத்துச் சென்று பின்வருமாறு எ.கார்தத்தில் சொன்னர்.

- சாஸ்திரி-எப்படியாவது ஸ்ரீமான் நீனிவாசலு ராஜுகாரு வைக் கண்டு பேசிவிட்டுப் போக வேண்டுமென்ற ஆவல் அதிகமாய் எனக்கிருந்ததாலும் ஒருக்கால் கணக்கப் பிள்ளையாவது, மற்ற வேலை க்காாாவது என்னேப் பார் த்துவிட்டால் பெரிய எஜமானரைப் பார்க்க விடமாட்டார் களென்றும் கினைத்து என் பேரில் அபிமான முள்ள சின்ன மீன் கந்தன் மூலமாய் எஜமானுக்கு நான் அவரைப் பார்க்க விரும்பும் சமாசாரம் சொல்லி அனுப்பி அவரை சமுத்திரக் காைக்கு அழைத்து வரச்சொல்லி வேறு யாருக்கும் தெரியாமல் பேசிவிட்டுப் போகலாமென நினைத்து அங்கு சென்றேன். நான் போன வேளையில் அவன் வீட்டில் டப்பா விளக்கெறிந்து கொண்டி ருத்தது. மெதுவாகக் கூப்பிட்டேன். யாரும் பேசவில்லை. வீட்டுக் கதவு கால் வாசி திறந்திருந்ததாலும், விளக்கெறிந்து கொண்டிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/164&oldid=633025" இலிருந்து மீள்விக்கப்பட்டது