பக்கம்:ஜெயரங்கன்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 ஜெயரங்கன்

முனென்று எவரிடமும் சொல்லிப்போவதில்லை யெனவும் வந்த பின் லும் தான் எங்கு சென்றிருந்தானென்றும் என்ன வேலையாய் சென் றிருந்தானென்றும் எவரிடமும் சொல்லிப் போவதில்லை யென்றும் ஆகையால் அந்த ஊருக்கு வர்தால்தான் கொண்டு வாலாமேயொ ழிய மற்றப்படி கண்டுபிடிக்க முடியாதென்றும் வந்து பதில் தெரிவி த்தார்கள். அப்பால் துப்பறியும் கோவித்தன அழைத்து ஸ்ரீனிவா சலு ராஜுகாரின் பிரேதத்தைக் கண்டு பிடிக்க முயற்சி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

கோவிந்தன்:-ஐயா! தாங்கள் முன்னல் ஆக்ஞையிட்ட வேலை களைக் கவனித்து வந்ததில் அவ்விஷயம் துப்பு துலங்கக்கூடிய நிலை மையில் இப்போது இருக்கிறது. உடனே அத்துப்புகளைப் பின்பற்றி சென்றாலொழிய காரியம் கெட்டுப் போகுமெனவும் நான் திட்டமாய் நம்புகிறேன். பூந்னிவாசலு ராஜுகாரின் பிரேதத்தைக் கண்டு பிடிப்பது முடியாத காரியமென்றே என் மனதில் திட்டமாய்ப்படுகிறது. ஆகையால் உபயோகமுள்ளதாக என் மனதில் படும் ஆராய்ச்சியை விட்டுவிட்டு உபகார மில்லாததாகப்படும் ஆராய்ச்சி செய்ய நான் விரும்பவில்லை. தயவுசெய்து முதலில் தங்கள் எனக்கு ஆக்ஞா பித்த வேலையை என்னைச் செய்ய விட்டுவிடுங்கள். தாங்கள் எவ்வ ளவு முயன்றாலும் அவர்கள் பிரேதத்தை இப்போது காணமுடியவே முடியாதென சம்புகிறேன்.

என்றார் கோவிந்தனது மனதை மாற்றுவது முடியாதென அறிந்த டெப்டி மாஜிஸ்டிரேட் எந்த வழியில் வேலை செய்யலாமென் ருவது தெரிவிக்கும்படி கேட்டார். அதற்குக் கோவிந்தன் மீன் கர்தன் மகன் கோபுவைக் கவனித்தால் ஏதாவது துலங்கலாமெனச் செல்லி அவரிடம் விடை பெற்றுச் சென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/167&oldid=633028" இலிருந்து மீள்விக்கப்பட்டது