பக்கம்:ஜெயரங்கன்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்பரின் பவிஷல் 169

இழுத்துக் கொண்டு வந்து சிலர் சயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டு மென்றும் சிலர் முள்ளுப் பீப்பாயில் போட்டு உருட்ட வேண்டு மென்றும் சிலர், ஒவ்வொரு மயிர்க்காலுக்கும் ஊசி இறக்க வேண்டு மென்றும் சிலர் இரும்பைப் பழுக்கக் காய்ச்சி பிரதேத்தை எடுத்துவத்த கைகளில் சூடு போடவேண்டும் என்றும் அவரவர்களுக் குத்தோன்றிய விதமாய்ப்பேசிக்கொண்டு ஓவென்று கூச்சல்போட்டுக் கொண்டு போலிஸ் ஸ்டேஷன் சென்றார்கள். அங்கு போலீசார் எவரும் இல்லை. அவர்களைக் தடுப்பவர்களும் யாருமில்லை. போலீஸ் இன்ஸ்பெக்டாவர்கள் எழுந்து வந்து என்ன காரியமாய் வந்தீர்க ளென்று மரியாதையாய்க் கேட்டார். கோபாலன் முதலிய ஐவர் களைத் தங்களிடம் ஒப்பிவித்து விட வேண்டு மென்றும். தங்கள் இஷ் டப் பிரகாாம் அவர்களைத் தண்டித்தாலொழிய தங்கள் மனக் கொதிப்படங்காதெனவும் தெரிவித்தனர். நான்கு மணி நேரங்களு க்கு முன்னுல் டெப்டி மாஜிஸ்டிரேட்டவர்கள் கைதிகளை பாளையன் கோட்டை ஜெயிலுக்கு அனுப்பி விட்டதாகவும் போலீஸ் ஸ்டேஷ னில் கைதிகள் யாருமில்லை யென்றும் தமது வார்த்தையை கம்பா விட்டால் அவர்களில் யார் யாருக்குப் போய்ப் பார்க்க இஷ்டமோ அவர்களையெல்லாம் போலீஸ் ஸ்டேஷன் உள்ளே போய்ப் பார்த்து திருப்தி செய்து கொள்வதில் தனக்கு எவ்வித ஆட்சேபனையில்லை யென்றும் சாத்வீகமாய்த் தெரிவித்தார். அவர்களில் முக்யஸ்தர் போய் ஸ்டேஷன் முழுவதும் சோதித்துப் பார்த்து விட்டு இன்ஸ் பெக்டர் தெரிவித்தது உண்மைதானென்று சொன்னவுடனே அமை தியாய்ப் போய் விட்டார்கள். வேட்டை நாய்கள் மான் கூட்டத்தைக் கண்டால் எவ்வாறு தாத்துமோ, அவ்வாறு கும் லேக் கண்ட வுடனே துரத்துவது பெரும்பான்மையான போலீசாருடைய செய்கையாதலால் அந்தப்போலிஸ் இன்ஸ்பெக்டருடைய நடத்தை இதை வாசிக்கும் பெரும்பாலோருக்கு ஆச்சரியத்தை விளைவித் திருக்கக்கூடும். அவ்வாறு செய்ததும் இன்ஸ்பெக்டாவர்களுடைய சொந்த அபிப்பிாாயமுமன்று. டெப்டி மாஜிஸ்டிரேட்டவர்கள் போவதற்கு முன்னுல் அந்த பிராந்தியத்திலேயே ரீமான் நீனிவா சுலு ராஜ-காரு என்றால் விரும்பாதவர்களே கிடையாது யென்றும் அவர் எவ்விதமான அக்கிரமும் செய்யாதவரென்றும் ஏழைகளுக்கு இாங்குபவரென்றும் சிறு குழந்தை யோனல் கூடபrமாய்ப்பேசப் பட்டவரென்றும் அவருக்கு. விரோதியே எவரும் இல்லை யென்றும்

22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/174&oldid=633036" இலிருந்து மீள்விக்கப்பட்டது