பக்கம்:ஜெயரங்கன்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் அராய்ச்சி 1sz

அவர் கொடுத்த புடவையும் ரவிக்கையும் கூட, பக்கத்தில் வைத்தி ருக்கும் பெட்டியில் ஜாப்தா சஹிதம் வைத்திருப்பதாயும், தன் வீட்டிலுள்ள புடவைகள் ரவிக்கைகள் ஜாக்கெட்டுகள் முதலியவை கள் வைத்திருக்கும் பெட்டிகளின் சாவியும் அத்துடன் வைத்திருப் பதாயும் ரசீது எழுதிக் கொடுத்து விட்டு அவைகளை எடுத்துக் கொண்டு உடனே போகும்படி சொன்னதாகவும், அப்பால் அங்கி ருப்பது சரியல்லவென போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தெரிவிக்க ஜாக்கிரிய்ய ரெட்டியார், கைகள் முதலியவை அடங்கிய பெட்டி யைத் திரும்பிப் பெற்றுப்போக மறுக்கதாகவும், அவர்கள் எடுத்துச் செல்லா விட்டால் அவர்கள் மாடியை விட்டு கீழிறங்கித் தெரு போவதற்குள் அவைகளைத் தாக்கி தெருவில் எறிந்து விடுவதாகச் செல்வம் சொன்னதின் பேரில் செல்வம் சொன்ன பிரகாரமே ரசீது எழுதிக் கொடுத்து விட்டு சகைகள் முதலியவைகள் அடங்கிய பெட்டியை எடுத்து வாச்செய்து எல்லோரும் வெளியேறியதாகவும் அதுமுதல் ஜாக்ரிய்ய செட்டியாருக்கும் பூநீதானுக்கும் வியாபார்த் தில் போட்டி அதிகரித்து வாங்கிய விலைகளுக்கும் குறைவாய் இரு வரும் போட்டி போட்டு விற்றதில் இருவருக்கும் பெருத்த நஷ்டங் களுண்டானதாகவும் ஆயினும் போட்டி குறையாது வியாபாாம் நடத்தி வருவதாகவும், கோவிந்தன் அங்கு வந்த நாளைக்கு முந்திய நாள் தான் நீதரன் செல்வம் ஆகிய இருவரும் எங்கோ சென்றி ருப்பதாகவும் விசாரித்து கோவித்தன் அறிந்தார். இவ்வளவு கெளரவமாய் செல்வத்தை வைத்திருந்த ஜாக்கிரிய்ய ரெட்டிபாரை கடுத்தெருவில் விட்டு விட்டு ஒரே கிமிஷத்தில் செல்வம் எவ்வாறு தனது மனதை மாற்றிக் கொண்டதல்லாமல் மீண்டும் ஜாக்கிரிய்ய ரெட்டியாருடன் போக மறுக்காளென்று வாசகர் ஆச்சரியப்பட லாம். ஆனல் உண்மையில் இதில் ஒரு ஆச்சரியமுமில்லை. ஏனெனில் குலமகளிரே சில சமயங்களில் திடீரென ஒருவரிடம் தோன்றும் பிரிவத்தால் தான் பிறந்த வீட்டின் பெருமையையும், புகுந்த விட்டின் சிறப்பையும் கவனியாமலும், தனது உற்மூேர், பெற்றார், பந்து மித்திரர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக தனது வயிற்றில் பிறந்த அருமைப் புதல்வர்களையும் புதல்விகளையும் த.விக்கும்படியும் தலைகுனியும்படியும் அவமானப்படும்படியும் விட்டு விட்டு, தான் அவ்வாறு செல்வதால் பின்னுல் தனக்கு நோக்கூடிய அவமானத்தையும், கான் மோஹித்துச் சென்ற புருஷன் சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/192&oldid=633056" இலிருந்து மீள்விக்கப்பட்டது