பக்கம்:ஜெயரங்கன்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் ஆராய்ச்சி 19?

பிடிங்கி மீண்டும் பலமுறை தனக்குள் வாசித்துக் கொண்டார். செல்வம் அவர் முகத்தை ஆவலுடன் கவனித்தாள். நீதரன் சற்று நோம் ஆழ்ந்த யோசனையிலிருந்து விட்டு செல்வம் நான் அவசரமாய் அயலூர் சென்று வர வேண்டிய திருக்கிறது. கான் சென்று சில தினங்களில் திரும்பி வந்து விடுகிறேன். அதுவரை வில் அதிக ஜாக்ாதையாயிருக்கவேண்டும். கான் போதிய பந்தோ பஸ் து அமைத்துச் செல்லுகிறேன்.

செல்வம்:-நான் தங்களை விட்டு ஒரு கிமிஷ கோமேனும் பிரித் திருக்க சம்மதியேன் என்று காம் முதல் முதல் சந்தித்தபோதே தங்களுக்குத் திட்டமாய்க் கூ றியிருக்கிறேன். தாங்கள் எங்கு செல் கிறீர்களோ அங்கு நானும் வருவேன்; நான் தங்களை விட்டு இங்கு அங்கு எங்காகிலும், சரி, இருக்கவேமட்டேன். என்னிடம் சொல் லாது தாங்கள் எங்காவது சென்றால் அன்னுளே என் ஆயுளின் கடைசி நாளென்று திண்ணமாய் நம்பிக்கொண்டு நான் இறந்து விடுவது நலமெனக் தங்கள் மனதில் பட்டால் அப்போது அவ்வாறு செய்யுங்கள்; இது சத்தியம்! -

பூந்தரன்.--செல்வம் என்ன யோசியாது இவ்வாறு சத்தியம் செய்து விட்டாயே! நான் எவருக்கும் தெரியாமல் மறைந்து செல்வ தாலேயே பலவித கெடுதல்கள் சம்பவிக்க ஹேதுவிருக்கிறது. உன்னையும் கூட அழைத்துப் போவதால் அக்கெடுதல்கள் இன்னும் ஆயிரம் பங்கு அ திகம் ஆகும்; ஆகையால் கான் சொல்லுகிறபடி சில தினங்கள் இங்கேயே யிரு; நான் சென்று கூடிய ஜல்கியில் அதா வது ஒன்றிாண்டு தினங்களில் திரும்பி வந்து விடுகிறேன்.

இசல்வம்:-இவ்வளவு ஜல்தியில் தங்களுக்கு என் பேரிலிருக் கும் பிரியம் மாறிவிடுமென நான் கனவிலும் கருதவில்லை. ஆனல் தாங்கள் ஆதியில் அன்பு பாராட்டி வந்த செல்லத்தின் பால் பிரியம் காட்டுவதை நான் ஆட்சேபிக்க வில்லை. ஆனல் எங்கள் இருவரை யும் சமமாய் நேசிப்பதாய்ச் சொன்ன வாக்குறுதியைக் காப்பாற்றுவ துடன் நான் தங்களை விட்டுப் பிரிந்திருப்பதில்லை யென்று கான் சத்தியம் செய்ததையும் காப்பாற்றுவது தங்கள் கடமையாகும். மேலும் தாங்கள் செல்லத்தை எனக்கு மறைவாய்க் காட்டுவதாக வாக்களித்திருக்கிறீர்கள். அந்த வாக்கை நிறைவேற்றும் காலமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/202&oldid=633067" இலிருந்து மீள்விக்கப்பட்டது