பக்கம்:ஜெயரங்கன்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொளம்பு துப்பறிவோர் போட்டி 245

வைத்துக் கோவின்தன் கொண்டுவந்த ஒரே ஆள் ஏறக்கூடிய, அதிக கனமில்லாத சிறிய ஆகாய விமானத்தை இறக்கைகளை எல்லாம் அவிழ்த்துவிட்டு பலமான கயிறுகளால் அதனுடன் இனத்துக் கட்டிக் கொண்டு ஆகாய விமானங்கள் இருந்த இடங்களைச் சரி செய்து விட்டு புறப்பட்டுச் சென்று விட்டார்கள். செளகரிய மான இடம் வந்ததும் விமானத்தை இறக்கி அதுவரை வேலை செய்யாது வந்த ஆகாய விமானத்தை வேலை செய்யச் செய்து அதில் கோவிந்தனும், நீதரருடைய ஆகாய விமானத்தில் சுந்தா ராஜுவும் செல்வமும், ஏறிக்கொண்டு சென்னைக் கருகாமையிலி ருக்கும் மீனம்பாக்கம் ஆகாய விமானங்கள் விடும் இடத்தில் இறங்கி தனது நண்பரின் ஆகாய விமானத்தை அதன் இடத்தில் விட்டு விட்டுப் பூட்டி சாவிபோட்டுக் கொண்டு, சுந்தரராஜுவின் இகாய விமானம் மோட்டார் வண்டியாக மாற்றி தரையிலும் ஒடக்கூடிய விதமாய் அமைக்கப் பெற்றதால் வேண்டிய மாறுதல்க ளைச் செய்து மோட்டார் வண்டியாக்கி அதில் மூவரும் எறிக்கொண் டு, கோவிந்தன் மோட்டாரை ஒட்டிக் கொண்டு போய் தன் வீடு சேர்ந்து அவர்களுக்கெனத் தயாரித்து வைத்திருக்கும் தனி அறை யைக் காட்டி அவர்களை செளக்யமாய்ப் படுத்து சாவகாசமாய் எழுத்திருக்கும்படியும் சாப்பிட்டான பின் மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொள்ளமென்றும் அவரும் தன் அறைக்குப் போய் படுத்துக்கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/250&oldid=633120" இலிருந்து மீள்விக்கப்பட்டது