பக்கம்:ஜெயரங்கன்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 ஜெயரங்கன்

களையும், தேவதாசி லகதிமியையும் பிரமிக்கச் செய்யலாமெனவும் தேவகாசி லகதிமிக்குக் தன்னிடம் அபார கம்பிக்கை பிறக்கும்படி செய்து பின் செல்லக்கைப் பற்றிக் கேட்டால் உண்மை யுாைக்கக் கூடுமென நம்பி சாமியார் வேஷம் பூண்டு லோகுவிற்குச் சொன்ன விஷயம் அப்போதே பலித்த உடனே ஜனங்களைப் பிரமிக்கச் செய்த தின் மூலமாய் தேவதாசி செல்லமும்வா, அவனிடம் என்னைக்கண்டு கேட்டால் செல்லத்தின் இருப்பிடம் தெரியுமென்று சொல்லிவிட்டு என்னே சுற்றிக் கவனித்திருந்தவர்கள் கண் அயரும் வரை காத்திரு ந்து அவர்களெல்லோரும் கண் அயர்த்ததும் தண்ணீரில் மூழ்கியதும் தண்ணிருக்குள்ளாகவே முக்கியபடி கொஞ்ச தாாம் சென்று அப் பால் மூச்சுவிடுவதற்கு தலையை மட்டும் மல்லாந்தபடி வெளிக்குத் து.ாக்கி அக்கரை சேர்ந்து எல்லோரையும் ஏமாற்றி அப்பால் தேவ தாசி லசுகிமி என்னைத் தேடி அலுத்து வீடு திரும்பும்போது எதி ரில் போய் பிகுவுடன் பேசி செல்லத்தைப் பற்றிய சங்கதி கேட்டு இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தையை தேவதாசி செல்லம் வாங்கி வந்ததாக ஸ்திரப்படுத்திக் கொண்டு கும்பகோணம் சென்று மற்றக் குழந்தையைப் பற்றிய விவாமறிந்து செல்வத்தைக் கண்டு. பிடித்தேன். -

செல்வம்-ஒட்டலி காடி இன்னுரென்று எவ்வாறு ஊகித்து அவர்களைக் கண்டு பிடித்தீர்கள்?

கோவிந்தன்:-டெப்டி மாஜிஸ்டிாேட்டவர்கள் டெப்டி கலெக் டர் மாதவராஜ-காரின் வீட்டி ல் நடந்த திருட்டு அந்த ஜில்லாவிலு ள்ள திருடர் கூட்டத்தாாால் நடந்தேற வில்லையென்று அஜ்ஜில்லாவி லுள்ள கலைமைக்காரர்களைக் கேட்டுக் கிட்ட மாய்த் தெரிவித்து விட் டதாலும், சென்னையில் ஒட்டலி கரடியென்ற இரண்டு பேர்போன திருடர் இருப்பதாக எனக்கு முன்னமே தெரிந்ததாலும், அத்திருடு போன அன்று அவ்விருவரும் சென்னையிலிருந்தார்களா யென்று விசாரிக்க அவர்கள் அன்று சென்னையிலில்லையென்றும் திருச்சந்தூர் சுப்ரமண்ய ஸ்வாமி சன்னதிக்கு யாத்திரை போய் வந்ததாகக் கேள் விப்பட்டதாலும் அவர்களாகத்தான் இருக்கலாமென்று ஊகித்து அவர்கள் திட்டமாய் மாலையில் ஆயிரம் விளக்கு கள்ளுக் கடைக்கா வது சாராயக் கடைக்காவது வருவது வழக்கமாதலாலும் உன்னே அங்கு கொண்டு போய் வைத்திருத்து அவர்களைப் பேச வைத்து

உறுதிசெய்துகொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/351&oldid=633231" இலிருந்து மீள்விக்கப்பட்டது