பக்கம்:ஜெயரங்கன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாவது அத்தியாயம் (o).

தாசி செ ல்லம்

பெண்களின் மோகவலேதனிற் சிக்கினேற் தீங்கிலாழ்ந்து திகைத் திடுவார் தாமே.

சிந்தரராஜா அவர்கள் காணுமற் போனது முதல் அவரு டைய அபிமான பத்தனியாகிய தாசி செல்லம் சில தினங்கள் வரை யில் அவர் பிரிவாற்றாமையைச் சகியாதவள் போல் அபிநயித்து வந் தாள். அப்படி யிருக்கும்போது அதுவரையில் பாஸ்திரீகளைத் தன் தாயாராகப் பாவித்து வருபவரென எல்லோராலும் மதித்து கொண் டாடப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் காமாகதிராவ் அடிக்கடி அவ் வீதியின் வழியாய்ப் போவதும் வருவதும் அச்சமயங்களில் வாச லில் இருக்கும் செல்லத்தைக் கடைக்கண்ணுல் பார்ப்பதும் அவள் புன்சிரிப்புடன் அவரைப் பார்ப்பதுமா யிருந்தார்கள். இவ்வாறு ஒரு அம் வரையும் நடந்தது. கடைசியாக ஒர் இரவு காமாகதிராவ் செல்லத்தின் வீட்டு வாசல் பக்கம் வந்ததும் நேராகப் போய் விடா மல் சில விடிைகள் அசையாது கின்றார். அப்போது அங்கு கின்று கொண்டிருந்த செல்லம் என் உள்ளே வாருங்களேன். என்னைப் பார்த்தால் தங்களுக்குப் பயமாகவா யிருக்கிறது? நான் என்ன புலியா கரடியா” என்றாள். காமாகதிராவ் உள்ளே சென்றார் ல்ெ லம் அவரை மிகுந்த உபசாரத்துடன் மாடிக்கு அழைத்துச் சென் ருள். தாய்க்கிழவி தெருக் கதவைத் தாளிட்டு விட்டுப் போய்ப் படு த்துக் கொண்டாள். விஸ்தரிப்பானேன்? அது முதல் இருவரும் மதனும் சதியும் போலிருந்து வந்தார்கள். அப்படி யிருத்துவரும் நாட்களில் ஒர் நாள் இரவு இன்ஸ்பெக்டர் காமாகதிராவ் செல்ல த்தைப் பார்த்து எப்படி யிருத்தாலும் உனக்கு சுந்தாராஜாவின் பேரில்தான் இன்னும் அபிமான மிருக்கிறது போல் தோன்றுகிறது என்றார் அவள் “தாசிகள் பொதுவாக எல்லார் பேரிலும் அபிமா னமிருப்பதர்க நடித்தாலும் அங்காங்சத்தில் எவராவது ஒருவர் பேரில்தான் அத்யந்த பிரியமிருப்பது வழக்கமென்றும் அப்பேர்ப் பட்ட பிரியம் காமா-கதிராவின் பேரில்தான் உண்மையில் இருப்பதா கவும் பல சத்தியங்கள் செய்தாள், அவள் சொல்வது உண்மை:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/72&oldid=633301" இலிருந்து மீள்விக்கப்பட்டது