பக்கம்:ஜெயில்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜே نة لأن யெல்லாம் எடுத்து ஒரு தட்டில் குவித்து வைத்தால், அந்தக் குவியல் கடிகாரம் ஆகுமா ? ஒவ்வோர் உறுப்பும் அதற்குரிய இடத்தில் பொருத்தப்பட் டிருந்தால்தான் கடிகாரம்’ என்ற பெயருக்கு உரியதாகும். இதைப் போலவே, சமூகத்திலும் அநேகம் உறுப்புக்கள் உண்டு. மக்கள், இயற்கைப் பொருள்கள், பொருள் உற்பத்திக்கு வேண்டிய கருவிகள், உபயோகமான மிருகங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் சமூகம். இந்த உறுப்புக்களில் ஒவ்வொன்றும் கன்தன் இடத்தில் இருந்து தொழில் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சமூகம் இராது. சில சமயங்களில் கடிகாரம் ரிப்பேர் ஆகிச் சீர்திருத்த வேண்டி யிருக்கிறது அல்லவா? அதுபோலவே சமூகத்தி லும் நேர்வது உண்டு. மக்களில் சிலர், சமூகமாகிய கடிகாரம் முறையாக ஒடிக்கொண்டிருக்க விடாமல்; இடையூறு செய்தால், அவர்களைச் சீர்திருத்தி மறுபடி அவர்களுடைய இடத்தில் பொருத்தி வைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. நோய்வாய்ப் பட்டவர்களுக்கு வைத்தியசாலைகள் அமைப்பது போலவும், கெ ட்டுப் போன கடிகாரங்களுக்கு ரிப்பேர் ஷாப்புகள் : அமைப்பது போலவும், குற்றத்தில் வீழ்ந்த மக்களுக்கு ஜெயிலை அமைக்கவேண்டி யிருக்கிறது. == குற்றம் என்பது என்ன ? இதைப் பற்றிப் பெரிய ஆசிரியர் பலர் விரிவாக ஆராய்ந்திருக்கிருர்கள்; இன்றும் ஆராய்ந்து வருகிருர்கள். எத்தனையோ சட்டப் புத்த கங்கள் இதைப் பற்றிய விவரங்களாகவே இருக்கின்றன. சுருக்கமாய்ச் சொன்னல், சமூகத்தை (சமூகத்தின் மற்ற உறுப்புக்களை) பாதிக்கும்படி எந்தக் கெடுதலை # - * 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/11&oldid=855416" இலிருந்து மீள்விக்கப்பட்டது