உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயில்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

نة لأبايع في தவர்களையும் அதை நன்ருய்ப் படித்துக்கொள்ள ஏற்ற பள்ளிக்கூடமாய் ஜெயில் விளங்குகிறது. பெரிய கொள்ளை வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் கோழி முட்டை திருடி ஜெயிலுக்கு வரும் கைதிகளை ஏளனம் செய்து ஈகைப்பார்கள். விரைவில் சின்னத் திருடர்களுக்கு அவர்கள் ஆசாரியர்களாக ஆகிவிடுவார்கள். ஜெயிலிலே கறுப்புக் குல்லாக்கள் ' என்று ஒரு வகுப்பினர் உண்டு. இவர்கள் திரும்பத் திரும்ப ஜெயிலுக்கு வருபவர்கள். இவர் க ள் விடுதலையாகிப் போகும் வாசலை அடைக்கவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில், இவர்கள் விரைவாக மறுபடி வந்துவிடுவார்கள். இவர்களுக்குக் கறுப்புக் குல்லாக்கள் கொடுக்கப் படுகின்றன. குல்லாக்களே இவர்களுக்குப் பட்டப், பெயர்களாகிவிட்டன. இவர் களை லோலாயிகள் என்றும் சொல்வதுண்டு. ஜெயில்கள் உள்ள நகரங்களில் சாதாரண ஜனங்கள் ஏசும்பொழுதுகூட, போடா, லோலாயி என்று சொல்லுவது வழக்கம். இத்தகைய பதங்கள் பல ஜெயிலின் பரிபாஷையில் உண்டு. ஜெயிலி லுள்ள கை விலங்கு, கால் விலங்கு, கடப்பாரை விலங்கு, சுவர் விலங்கு முதலிய விலங்கு வகைகளே இன்னும் நம் தமிழ் அகராதியில் வராமலிருக்கும் பொழுது ஜெயில் பரிபாஷைப் பதங்கள் நமக்கு எப்படித் தெரியமுடியும் ? பதங்கள் எப்படியேனும் போகட்டும்! புதிய கைதிகள் தீட்சை பெறுவது மேற்சொன்ன லோலாயிகளிடம்தான் என்பதை நாம் தெரிந்துகொண்டால் போதும். ஜன்ம தண்டனை அடைந்தவர்களுக்குச் சிவப்புக் குல்லாக்கள் கொடுக்கப்படுகின்றன. அவர்களிற் பலர் 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/18&oldid=855427" இலிருந்து மீள்விக்கப்பட்டது