TIRUNELVELI MUNICIPAL, Public Library & Reading S dvoro TIRUNEL VELI JUNCT: CN i எத்தனையோ சினிமாக்களும், நாடகசாலைகளும், வாசகசாலைகளும், போக்குவரவு சாதனங்களும், மற்ற வசதிகளும் பெற்றிருந்தும், நாம் அடிக்கடி, பொழுது போகவில்லையே! என்று சொல்லுகிருேம். கோட்டைக் குள் - அறைக்குள் - அடைபட்டு வெளியுலகத் தொடர்பே இல்லாதிருக்கும் கைதிகளுக்குப் பொழுது எப்படிப் போகும்? பொழுது சும்மா போகுமா ? ஒவ்வொரு நாளும் கைதிகளின் உள்ளத்தின் உரத்தை உறிஞ்சிக் கொண்டும், உடல்களை வற்ற வைத்துக் கொண்டுமே பொழுது போகும். கடைசியில் அவர்கள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொண்டு, தம் பரிதாப நிலைக்கு இரங்க ஆரம்பித்துவிடுவர். விடுதலையாகும் வரை இங்குதலும், எங்குதலும், விம்முதலும், பொருமுதலுமாகப் பொழுது கழியும். இதற்குப் பின் உள்ளத்திற்கு மீட்சி எது? al கைதியானவுடனே மனிதன் தன் சுதந்திரத்தை இழந்துவிடுகிருன். நிற்கவும், உட்காரவும், உண்ணவும், உறங்கவும்கூட அவன் பிறர் உத்தரவை எதிர்பார்க்க வேண்டியவனகிருன். இது மட்டுமா? ஜெயில் வாசலுக் குள் நுழைந்ததும் அவன் நிர்வாணமாக்கப்பட்டு, அவனுடைய வழக்கமான உடைகள் பறிக்கப்படுகின்றன. மனிதனை அலங்கோலமாக்கும் ஜெயில் உடை (குல்லா உள்பட) அவனுக்குக் கொடுக்கப்படுகிறது. மாறுதல் இத்துடனும் நிற்கவில்லை. அவனுக்கு ஒர் எண் - நம்பர் - கொடுக்கப்படுகிறது. அவனுக்கு முக்தி வந்தவனுடைய அடுத்த நம்பர் அவனுடையது. இவ்வாஅ மனிதன் நம்ப'ராக மாறிவிட்ட பிறகு மனிதத் தன்மையைப் போக்குவதற்கு வேறு அநேகம் சடங்குகளும் உண்டு. 15
பக்கம்:ஜெயில்.pdf/20
Appearance