உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயில்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ட்டுரைகள் மனிதனுக ஜெயிலுக்குள்ளே போனவன், இடையில் ஒரு கம்ப'ராகி, விடுதலையாகும் பொழுது பழைய மனித புைம் இல்லாமல், நம்ப ராயும் இல்லாமல், ஒரு புது சிருஷ்டியாகக் காட்சியளிப்பான் ! ஜெயில் தவச்சாலை அல்ல; அது ஒரு நாளும் அப்படியிருக்க முடியாது. அது மானிட உள்ளத்தைப் பண்படுத்தும் வைத்தியசாலையாகவும் இருக்க முடியாது. ரம்பம், கோடரி, உளி, சம்மட்டி முதலிய கருவிகளைக் கொண்டு நோயாளிக்கு ஆபரேஷன் செய்து குணப் படுத்த முடிந்தால், ஜெயிலைக்கொண்டு குற்றவாளியையும் சீர்திருக்க முடியும். மனிதனின் சுதந்திரத்தைப் பறித்த பிறகு அவனுக்கு எந்த உபதேசமும் எருது. சிறகை 'ஒடித்துவிட்டால் பறவை பறக்க முடியாது. பறக்கவே முடியாத பறவை பாட முடியுமா? மனிதன் அடிமைப் பட்ட முதல் நாளே தன் ஆண்மையில் பாதியை இழந்து விடுகிருன் என்று கிரேக்கப் புலவர் ஹோமர் கூறியது உண்மையிலும் உண்மை. -- * -- மரண தண்டனையைப்பற்றி இங்கே அதிகம் குறிப்பிட வேண்டியது அவசியமில்லை. இப்பொழுது உலகத்தில் பெரும்பாலான தேசங்களில் இந்தத் தண்டனை ரத்தாகிவிட்டது. பிரிட்டிஷ் சாம்ராஜ்ய நாடுகளில் - முக்கியமாக இந்தியாவிலும் இங்கிலாந்திலும் - மரண தண்டனையை இன்னும் மாற்ருமலிருப்பது பிற்போக் கையே காட்டுகிறது. ஒரு வெறியில் கொலை செய்தவனே சமூகம் நிதானமாக ஆழ்ந்து யோசித்துத் தாக்கிலிட்டுக் 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/21&oldid=855434" இலிருந்து மீள்விக்கப்பட்டது