உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயில்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் அவசியம். அந்த முறைகள் உலகத்திற்கே புதுமை யானவை, ஆச்சரியமான பலனைக் கொடுத்து வருபவை. நீதி நிர்வாகமும் ஜெயில் நிர்வாகமும் ஒன்ருேடு ஒன்று இணைப்புள்ளவை. ஆதலால், ரஷ்யாவில் நீதிபதிகள் அடிக்கடி ஜெயிலுக்குப் போய் அங்குள்ள நிலைமைகளைப் பரிசீலனை செய்யக் கடமைப்பட்டவர்கள். அங்கே நீதிபதிகளில் இரண்டு பிரிவினர் உண்டு : ஒரு பிரிவினர் வழக்கமாக நீதிபதிகளா யிருப்பவர்கள்; மற்ருெரு பிரிவினர் பொது ஜனங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப் பெற்றவர்கள். நீதி விசாரணையில் செல்வருக்கென்று விசேஷ வசதிகள் இல்லை. எந்த ஏழையும் எளிதில் வக்கீல் வைத்துக்கொண்டு விவாதம் செய்து நீதி பெற முடியும். வக்கீல்களுக்கு பீஸ் கிடையாது. கட்சிக் காரர்களுடைய வசதிக்குத் தக்கபடி வக்கீல்களின் சங்கத் திற்குப் பணம் கொடுப்பார்கள். அந்தச் சங்கத்தார், வக்கீல்கள் அந்தந்த மாதத்தில் எவ்வளவு சிரமப்பட்டு உழைத்திருக்கிருர்கள் என்பதைக் கவனித்து, மொத்த வருமானத்திலிருந்து ஊதியம் பிரித்துக் கொடுப்பார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களின் உரிமைகள் பாது காக்கப்பெற்றிருக்கின்றன. விசாரணைக்கு முன்னல் கைது செய்வதே அபூர்வம். குற்றவாளிகளோடு சமூகமும் குற்றத்திற்குப் பொறுப்புள்ளது என்பதை ஸோவியத் சட்டங்கள் எல்லாம் அடிப்படையாகக் கொண்டிருக் கின்றன. இதல்ை ஏற்பட்டுள்ள நன்மைகள் அனந்தம். ரஷ்யாவில் நேரில் போய்ப் பார்த்து வந்த ஹாரோல்ட் லாஸ்கி ருசிகரமான அநேக விஷயங்களைக் குறிப்பிட் 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/23&oldid=855439" இலிருந்து மீள்விக்கப்பட்டது