உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயில்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் இருப்பாரா? பச்சைத் தண்ணீரைத் தூக்கி அவர் மேல் கொட்டினராம். இவ்வாறு இரண்டு மாதம் போராட்டம் நடந்து, போராடியவர் பூவுலகை நீத்துச் சென்ருர். என்னென்ன செய்தாலும் பூனூல் திரும்பக் கொடுக்கப் பட்டதா?’ என்று அதிகாரிகள் சந்தோஷப்பட்டிருப் பாாகள. 1919 - ல் பஞ்சாப் ராணுவச் சட்ட அமுலுக்குப் பின், பஞ்சாப்பிலிருந்தும், ஆமதாபாத்திலிருந்தும் бгдг/т 6Үг மான கைதிகள் அந்தமானுக்குக் கொண்டு போகப் பட்டனர். அவர்களுக்குச் செக்கிழுக்கும் வேலை கொடுக்கப்பட்டது. அவர்கள் செய்ய மறுக்கவே தனி அறைகளில் தள்ளிப் பூட்டப்பட்டனர். ஒரு நாள் முழுதும் பட் டி னி போடப்பட்டனர். மறுநாள் எல்லோரும் வெளியே கொண்டுவரப்பட்டு செக்கடியில் நிறுத்தப்பட்டனர். 1919-லேயே சக்தியாக்ரக தத்துவம் பரவிவிட்டதல்லவா? அவர்கள், செக்கிழுக்க மறுத்து, கீழே தரையில் படுத்துக்கொண்டு சத்தியாக்ரகம் செய்தனர். அவர்களுடைய கால்களும் கைகளும் கயிறு களால் கட்டப்பட்டு, எல்லாக் கயிறுகளும் செக்கின் கம்பத்துடன் கட்டப்பட்டன. வேறு கைதிகளைக் கொண்டு செக்கு ஒட்டுவிக்கப்பட்டது. இந்தச். சத்தி யாக்ரகிகள் செக்கிழுக்க மாட்டோம்” என்ருல், செக்கு அவர்களே இழுத்துக்கொண்டு சுழல ஆரம்பித்து விட்டது! தரை நெடுக எத்தனை முறை சுற்றிச் சுற்றி யிழுக்கப்பட்டார்களோ! சத்தியாக்ரகிகள் எல்லோ ருக்கும் கை, கால், முதுகு, வயிறு எங்கும் காயங்கள்; செக்கைச் சுற்றி இரத்தம் சிதறப்பட்டது. இப்படி h 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/29&oldid=855451" இலிருந்து மீள்விக்கப்பட்டது