உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயில்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் ஏராளமான காடுகளிருந்தும் அங்கே கொடிய வன விலங்குகள் அதிகமில்லை. விஷமில்லாத பாம்புகள் எங்கும் அதிகமா யிருக்கின்றன. அங்குள்ள பூரான்கள் மிகப் பெரியவையாயும் விஷமுள்ளவையாயும் இருக் கின்றன. அநேகமாக எல்லாத் தீவுகளிலும் கொசுவும், அட்டைகளும், பூச்சிகளும் அதிகம் உண்டு. அந்தமானின் பூர்வீக ஜனங்கள் நீகிரோவரைப் போல் இருப்பார்கள். குள்ளமாயும், கறுப்பாயும், சுருட்டைக் தலையுடனும் இருப்பார்கள். இவர்கள் இரண்டு வகுப்பினராக இருக்கிருர்கள். ஒரு வகுப்பினர் தான் பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் அடக்கி நாகரிகப் படுத்தப்பட்டு வந்தனர். இந்த வகுப்பினரில் பலரும் தங்கள் இடைகளைத் தழைகளாலேயே மூடிக்கொண்டு திரிகிருர்கள். இவர்களிற் பெரும்பாலார் வேட்டை யாடியே ஜீவனஞ் செய்கிருர்கள். கிறிஸ்தவ மிஷனரிகள் இவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கிறிஸ்தவ மார்க் கத்தில் சேர்த்து வருகிருர்கள். சிறையிலிருந்து தப்பி யோடிய கைதியைக் கண்டால் இவர்கள் உடனே அவனைப் பிடித்துக் கொடுத்துவிட வேண்டுமென்றும், அப்படிக் கொடுத்தால் ஒரு கைதிக்கு ரூ. 10-வீதம் பரிசளிப்பதாயும் சர்க்கார் இவர்களுக்குச் சொல்லி வைத்திருந்தார்களாம். இவர்களைத் தவிர முற்றிலும் அநாகரிகமாய்க் காட்டில் வாழும் ஆகுப்பினர் சில நூறு பேர்தான் இருக்கின்றனர். காடுகள் இடைவிடாமல் அழிக்கப்பட்டு வருவதால் இவர்கள் தொகையும் சுருங்கிக் கொண்டே வருகின்றது. 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/33&oldid=855461" இலிருந்து மீள்விக்கப்பட்டது