தீவாக்தாம் அந்தமான் கிர்வாகம் முழுதும் ஒரு பிரதம' கமிஷ் னரின் கையில் இருந்தது. அவருக்கு வருவிச் சம்பளம் ரூ. 36,000. அவர்தான் இந்தியா அரசாங்கத்திற்குப் பொறுப்பானவர். தீவுகள் ஏழு ஜில்லாக்களாகப் பிரிக்கப் பட்டு, ஒவ்வொரு ஜில்லாவிலும் ஒரு மாஜிஸ்திரேட் வைக்கப்பட்டிருந்தார். பிரதம கமிஷனருக்குக் கீழ் உதவி கமிஷனரும், ஜில்லா ஆபீஸரும் இருந்தனர். அங்கே அநேகம் போலீஸ் ஸ்டேஷன்கள் இருந்தன. அந்தமானுக் கென்று மிலிடரி போலீஸும் இருந்தது. அங்கிருந்த முக்கியமான வெள்ளைக்கார அதிகாரிகள் மட்டும் அந்தமானின் தலைநகரமான ரூஸ் என்னுமிடத்தில் வசித்து வந்தார்கள். ரூஸ் ஒரு தனித் தீவு. ஜன்ம தண்டனையும் நீண்ட காலத் தண்டனையும் பெற்ற கைதிகளை நாடு கடத்திச் சேர்த்து வைப்பதற்காக அந்தமான் உபயோகிக்கப்பட்டு வந்தது. தீவாக்தர சிட்சைக்காக அங் த மான் தேர்ந்தெடுக்கப்பட்டதே 1858-க்குப் பிறகுதான். அவ் வருஷம் இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் பல போராட்டங்கள் கடந்ததும், பற்பல வீரர்கள் ஜாதி, மத பேதமின்றி அவைகளில் தலைமை வகித்து நடத்தியதும் சரித்திரப் பிரசித்தமான விஷயங்கள். அந்த யுத்தங்களில் முக்கியமாக ஆயிரக் கணக்கான சிப்பாய்கள் கலந்து போராடினர். கலகக் காரர்களில் பல்லாயிரவர் சுடப்பட்டும், அளக்கிலிடப் பட்டும் மாண்டனர். அநேகர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிற் பலர் இந்த காட்டில் இருந்தாலே மீண்டும் கலகங்களுக்குக் காரணமாகு மென்றதால், அவர்களை எங்காவது தெற்லேயில் ஒதுக்க 29
பக்கம்:ஜெயில்.pdf/34
Appearance