பக்கம்:ஜெயில்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீவாக்தம் நடத்தப்படுவதையும், துன்பங்களையும் எப்படிச் சகித்துக் கொண்டிருப்பார்கள் ? நாளடைவில் மானபங்கமாயுள்ள சகல சட்டங்களையும் அவர்கள் மீற ஆரம்பித்தார்கள். அக்காலத்தில் ஒரு பிளாக்கில் அடைக்கப்பட்டிருக்க ராpயக் கைதிகள் ஒருவரோ டொருவர் பேசக்கூடாது. அவர்கள் ஒன்ருய் வேலை செய்யலாம், ஒரே இடத்தில் வசிக்கலாம் - ஆனல் வாய் திறந்து பேசக்கூடாது ! வேலை செய்யும் பொழுது இரண்டு ராஜீயக் கைதிகள் சேர்ந்தாற்போல் நெருங்கி உட்காரக்கூடாது. இடையில் கிரிமினல்கள் உட்கார்த்தப்படுவார்கள். இந்த அவமான கரமான சட்டத்தை, ராஜீயக் கைதிகள், எத்தனை தடவை முடியுமோ அத்தனை தடவை உடைத்தெறிந்தார்கள். அதற்குரிய தண்டனை, குனிய உட்கார முடியாதபடி எழு நாள் நிலைவிலங்கும், காலில் கடப்பாரை விலங்கும். இத் தண்டனையை அவர்கள் மீண்டும் மீண்டும் ஏற்றுக் கொண்டார்கள். கிரிமினல்கள் அடிக்கப்படும் பொழுதும், தாக்கப்படும் பொழுதும், அவர்கள் ஒன்று சேர்ந்து ஆட்சேபித்தாலும், சாப்பாடு நன்ருயில்லை என்ருே, குறைவு என்ருே குறை கூறினலும் தண்டனைகள் கொடுக்கப்படும். சிறை அதிகாரிகளை எதிர்த்து கின் ரு லொழியக் கொடுமைகள் ஒழிய மாட்டா என்று ஆதியில் போராடியவர்கள் சா வ ர் க் க ர் சகோதரர்களும், அரவிந்தரின் சகோதரர் பரிந்திர குமார் கோஷ-ம், அவர்களுடன் வசித்த ராஜீயக் கைதிகளும். இதல்ை அவர்களுக்குத் திரும்பத் திரும்பத் த ண் டனே க ள் கிடைத்துக்கொண்டே இருந்தன. கடைசியில் அவர்க ளுக்குச் சாதாரண வேலையும், சுமாரான நல்ல உணவும் கொடுக்கப்பட்டன) 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/40&oldid=855477" இலிருந்து மீள்விக்கப்பட்டது