உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயில்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. இலங்கையில் இந்தியத் தொழிலாளர் உலக ஜனத் தொகையில் இந்தியர் சுமார் ஆறில் ஒரு பங்கு இருக்கின்றனர். இலங்கையின் ஜனத் தொகையில் இந்தியர் எண்ணிக்கை சுமார் ஆறில் ஒரு பங்கு. உலகத்தில் ஆறில் ஒரு பாகத்தினராகிய இந்தியர் சொந்த நாட்டிலேயே அடிமைகளாய், அரசியல் பரா தீனத்திலும், சமூக-பொருளாதார நிலைமையில் பாதா ளத்திலும் கிடந்து உழல்வது போலவே, இலங்கையின் ஆறில் ஒரு பாகத்தினாகிய இந்தியரில் பெரும்பாலார் கேவலம் உயிரடைத்த சடலங்களாக வாழ்கின்றனர். பெரும்பாலும் இந்தியர் விடுதலையைப் பொறுத்தே இலங்கை - இந்தியர் விடுதலையும் ஏற்படக்கூடும். ஆயினும், இடையில் இந்தியாவிலும் இலங்கையிலும் செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவோ இருக்கின்றன. அதிலும், இலங்கையிலுள்ள இந்தியரில் பெரும்பாலார் தமிழர்களாய் இருப்பதால், தமிழ் நாட்டிலேதான் அபரி மிதமான கிளர்ச்சியும் பிரசாரமும் செய்யவேண்டி யிருக்கிறது. அதற்கு அடிப்படையாக இலங்கையில் வாழும் தமிழர்களும் விழித்துக்கொண்டு, மிகுந்த கட்டுப் பாட்டுடன், ஐக்கியமாகவும், தீவிரமாகவும் வேலை செய்ய வேண்டும். 39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/44&oldid=855485" இலிருந்து மீள்விக்கப்பட்டது