பக்கம்:ஜெயில்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் இலங்கையிலுள்ள இந்தியரில் சுமார் ஏழு லட்சம் பேர் தேயிலை, ரப்பர், கொக்கோ தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள்; சுமார் இரண்டரை லட்சம் பேர் தோ ட்டங்களுக்கு வெளியே நகரங்களிலும், கிராமாந்தரங்களிலும் பலவித வேலைகள் செய்தும், வர்த்தகம் செய்தும் வாழ்பவர்கள். இந்தியர்களில் பெரும்பாலார் கோட்டக் கூலிகளா யிருப்பதே அங்கு I5ԼD :51 பலமாகவும் பலவீனமாகவும் இருக்கிறது. தோட்டத் தொழிலாளர் இலங்கையின் செல்வத்திற்கும், தோட்ட முதலாளிகளான ஐரோப்பியர் லாபத்திற்கும் காரணமாய் இருப்பதாலும், அந்த ஐரோப்பியர் செல் வாக்கே இலங்கை அரசியலில் உச்ச ஸ்தானத்தில் இருப்ப தாலும், தோட்டத் தொழிலாளரின் பலத்தினலே, அவர்களைப் பின்சார்ந்து வெளியிலுள்ள தொழிலாளரும், பணக்காரரும், வர்த்தகர்களும் வாழ்கிருர்கள். எந்த நாளில் தோட்டக் தொழிலுக்கு இந்தியர் அவசியம் இல்லாமற் செய்யப்படுகின்றதோ அதே தினத்தில் மற்றெல்லா இந்தியரும் மூட்டை முடிச்சுக்களுடன் புறப்படவேண்டிவரும். இவ்வாறு மற்ற இந்தியருக்கும் அரணுக விளங்கும் கோட்டத் தொழிலாளரே நமது பலவீனமாயும் விளங்குவது எவ்வாறென்ருல், அவர்களை ஐக்கியப்படுத்தி, தங்கள் உரிமைகளை உணர்ந்து கிளர்ச்சி செய்யும்படி செய்வது பகீரதப் பிரயத்தனம். தவிரவும், இந்திய ஆலேத் தொழிலாளரைப் போலன்றி, அவர்கள் பயங்கரமான அடிமைத் தளைகள் பூட்டப்பட்டிருக் கிருர்கள். வாழ்வுக்கே போதாத வருமானம்; @° யிருக்கும் குடிசையும் முதலாளியுடையது; முதலாளி உத்தரவில்லாமல் யாரையும் காணவோ பேசவோ 40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/45&oldid=855486" இலிருந்து மீள்விக்கப்பட்டது