பக்கம்:ஜெயில்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியத் தொழிலாளர் முடியாது; சங்கம் அமைத்து உழைக்கச் சக்தர்ப்பமே கிடையாது. முதலாளி நினைத்தால் அவர்களைப் பஞ்சாகக் காற்றிலே பறக்கும்படி ஊதிவிட முடியும் ஆயினும், அவர்களே வைத்தே எல்லோருக்கும் விடிவுகாலம் வர வேண்டியிருக்கின்றது. 1883 - ம் வருஷம் Jγίφ-σοι!) வியாபாரம் ஒழிக்கப் பட்டதில் இருந்து இலங்கைத் தோட்டங்களில் இந்தி யரைக் கொண்டுபோய் உழைக்கச் செய்யும்படி எற்பட்டது. இலங்கை அரசாங்கமே கூலிகளை இறக்கு மதி செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அந்தக் காலத்தில் கவர்னர்களும், ஆங்கில அதிகாரிகளுமே தோட்ட முதலாளிகளாய் இருந்தனர். பின்னர் வேறு பல ஐரோப்பிய முதலாளிகள் போட்டியிடவே, பெரும் பாலான இலங்கைத் தோட்டங்கள் இப்பொழுது அந்த முதலாளிகளுக்கே சொந்தமாய்விட்டன. வெகு சில இந்திய சிங்கள முதலாளிகளும் இருக்கின்றனர். இந்தியத் தொழிலாளர், இலங்கைத் தோட்டங்களில் வேலை செய்ய ஆசைப்பட்டு, இலங்கை வாசிகளைத் தொலைத்துத் தாங்களே இலங்கையை வளைத் துப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் செல்லவில்லை. ஆதியில் அவர்கள் இந்தியாவை விட்டுப் புறப்படவே மறுத்திருக்கின்றனர். அதிலும், முதலில் சென்ற இந்தியக் கூலிகளுக்கு நேர்ந்த விபத்துக்களையும், இலங்கைக் காடுகளில் மலேரிய மக்களை வாரி விழுங்கி யதையும் தெரிந்த பின்பு, இங்கிருந்து பசியால் மடிவது அங்கு போய்ச் சம்பாதிப்பதிலும் மேலென்று அவர்கள் கருதினர். 1843- முதல் 1867 - வரை இலங்கைக்குச் 41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/46&oldid=855488" இலிருந்து மீள்விக்கப்பட்டது