கட்டுரைகள் சென்ற 14- லட்சம் தொழிலாளரில் 4,60,000 பேர் இறந்தொழிந்தனர் என்ருல், மேற்கொண்டு அங்கு செல்வது சாவதற்குத்தான் என்று அவர்கள் எண்ணி ர்ைகள். ஆயினும், இலங்கை அரசாங்கமும் தோட்ட முதலாளிகள் சங்கமும் பல யுக்திகள் செய்து, இந்தியக் கங்காணிகளிடம் ஏராளமான பணம் கொடுத்து, இந்தியத் தொழிலாளரை வரவழைக்க ஏற்பாடு செய்தனர். முதலில் ஒப்பந்தக் கூலி முறையில், இட்ட கட்டளையை மீற மாட்டேன்' என்று உறுதிமொழி எழுதி வாங்கித் தொழிலாளரை அழைத்துக்கொண்டு போன முறையையும், ஒரு நாள் வேலை செய்யாமல் இருந்தால் தொழிலா ளரைக் கைது செய்து ஒரு மாதம் சிறைத்தண்டனை விதிப்பதையும், பெண்டுகள் குழந்தைகளுடன் கூட்டோடு ஜெயிலில் அடைப்பதையும் நாளடைவில் மாற்றினர்கள். தொழிலாளர் நிலைமையை விசாரிக்கக் கமிஷன்கள் ஏற்பட்டன. இந்திய் அரசாங்கமும் இடையிடையே தலையிட்டது. குறைந்த பட்சக் கூலி விகிதம் நிர்ணயிக்கப் பட்டது. வேலை நேரம் கிர்ணயிக்கப்பட்டது. ஆயினும், யார் முயற்சியால், என்ன செய்யப்பட்டாலும், தொழி லாளர் நிலைமை மகா மோசமாகவே இரு ங் து வந்திருக்கிறது. அவர்களுக்கு ஏ ம் ப ட் ட கடன் சுமைகளில் இருக்து அவர்களால் மீள முடியாமலே போய்விட்டது. சட்டங்களும் திட்டங்களும் சிறிது சிறிது நன்மை செய்தாலும், சட்டங்கள் நிறைவேற்றப் படும் முறையைப் பார்த்தால் அவை இல்லாமல் இருக் தாலும் ஒன்றுதான் என்று சொல்லும்படி இருக்கிறது. உழைப்பாளர் தலை நிமிர்ந்து ஒர் உரிமையை நிலைநாட்ட முடியாது. தலை நிமிர்ந்தால், வயிறு பட்டினி கிடக்க 42
பக்கம்:ஜெயில்.pdf/47
Appearance