பக்கம்:ஜெயில்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் கங்காணிகள், தலைமைக் கங்காணிகளுடைய மனப்பான் மையைப் பற்றிப் பல வருஷங்களாய்த் தெரிந்துகொண்ட அனுபவமும், இந்தியர் நலனுக்காக உழைக்கும் தலைவர்கள் எவ்வளவு உயரங்தான் பறக்க முடியும் என்ற நிச்சயமும் அவர்களுக்கு இருக்கின்றன. அவர்களுக்கு எதிராக உள்ளவர்கள், இலங்கையிலே தேயிலைச் செடிகளின் துனர்களில் மாசி (கருவாடு ) விளைந்திருப்பதாக நம்பிப் போனவர்களின் சங் த தி யார் க ளான ஏழு லட்சம் வாயில்லா ஜனங்கள் ! இந்த லட்சக் கணக்கான மக்களின் நிலைமையைச் சில வரிகளில் சொல்லிவிடலாம். தங்களுடைய சொந்தக் குடிசைகளில் அரைவயிற்றுக் கஞ்சியாவது காய்ச்சிக் குடித்துக்கொண்டு வெளியில் வந்து நாள் கூலிக்கு வேலை செய்யும் நமது நாட்டுத் தொழிலாளர்களுக்கும் இவர் களுக்கும் மிகுந்த வித்தியாசமுண்டு. அவர்கள் குடி யிருப்பதே தோட்டத்திற்குள் முதலாளிகளால் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கும் குடிசைகளில் ஒ வ் .ெ வா ரு குடிசையிலும் பலர் அடைந்து வாழ்கின்றனர். இக் குடிசைகளின் வரிசைக்கு லேன்' என்று சொல்லு கிருர்கள். இந்த லைன்களையும் அவற்றில் வசிப்பவர் களையும், அவர்கள் செய்யும் தொழில்களையும் பார்க்கும் பொழுது நமக்கு ஜெயிலின் நினைவே வரும். ஜெயிலிலும், இந்தக் காலத்தில் புதிய முறையில் கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களுள்ள ஜெயிலும், முன் காலத்து ஜெயில் முறையும் கலந்திருப்பதாகச் சொல்லலாம். இந்தப் பயங்கரமான உபமானத்தை இலங்கைத் தோட்டத்திற்குக் கூறலாமா என்று சில நண்பர்கள் நினைக்கலாம். சில 44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/49&oldid=855494" இலிருந்து மீள்விக்கப்பட்டது