பக்கம்:ஜெயில்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியத் தொழிலாளர் வேறுபாடுகள் உண்டு என்பதை மறைக்கவில்லை. ஆல்ை, பழைய ஜெயில் முறையின் அடிப்படையான தத்துவமே இந்தத் தோட்டத் தொழிலின் அடிப்படையில் காணப் படும் தத்துவம் என்பதை வற்புறுத்தவே இப்படிக் கூறப் பட்டது. ஒரு கங்காணி எவ்வளவு அதிகத் தொழி லாளரை வரவழைத்து வேலை வாங்குகிருரோ அவ்வளவு அதிகமான ஊதியம் அவர் பெறுமாறு திட்டம் வைத்திருக் கிருர்கள். வேலை செய்யும் ஆள் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு தலைமைக் கங்காணிக்கு 2 - சதம், உதவிக் கங்காணிக்கு 2 - சதம் பென்ஸ் காசு என்று கொடுக்கப் படுகிறது. (ஒரு ரூபாய்க்கு 100 - சதம்.) இந்த 4சதமும் தொழிலாளர் சம்பளத்தில் பிடித்துக் கொடுப்ப தில்லை. இது வேறு, சம்பளம் வேறு. தொழிலாளரும், உதவிக் கங்காணிகளும், தலைமைக் கங்காணிகளும், யாவருமே த்ோட்ட சூப்பிரண்டின் தயவை எதிர் பார்த்தே வாழ வேண்டியிருக்கிறது. ஒரு கங்காணி, 25-வருஷம் உழைத்து ஆயிரக் கணக்காய் லாபம் தேடிக் கொடுத்திருந்தாலும், அவர் தொழிலாளர் சார்பாய் உழைப்பதாய்த் தெரிந்தால், மறு நிமிஷம் அவர் வெளி யேற்றப்படலாம். துரைக்குப் பிடிக்காத கங்காணியே தோட்டத்தை விட்டு (இந்தியாவுக்கு-வேறு இடையில் கங்க இடமும் வசதியும் கிடையாது) வரவேண்டி யிருந்தால், தொழிலாளர் கதி என்ன ? சட்டம் சொல்லு கிறது: கோட்டத் தொழிலாளி ஒரு தோட்டத்திலிருந்து நீங்கி வெளியேற வேண்டுமானல் ஒரு மாத நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று. அதே சட்டம் முதலாளி தொழிலாளிக்கு ஒரு மாத கோட்டீஸ் கொடுக்காமலே, ஒரு மாதச் சம்பளத்தை மட்டும் கொடுத்து விரட்டிவிட 45 *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/50&oldid=855498" இலிருந்து மீள்விக்கப்பட்டது