கட்டுரைகள் அநுமதிக்கிறது. இந்தச் சட்டம் வெகு வேடிக்கையாகத் தினசரி அமுல் கடத்தப்படுகிறது. முதலாளி ஒரு தொழிலாளிக்கு ஒரு மாதச் சம்பளம் கொடுத்து, பற்றுச் சீட்டும் (Discharge Licket) கொடுத்தனுப்பி விடுகிரு.ர். அவன், உடம்பிலுள்ள உழைக்கும் சக்தியைத் தவிர வேறு ஒரு சொத்தும் இல்லாமல், புறப்படுகிருன். அவன் போகும் பொழுது அவன் மனைவியையும் மக்களையும் அழைத்துக்கொண்டு போக முடியாது. ஏனெனில், அதே சட்டம், முதலாளியால் போகச் சொல்லப்படாமல் இருக்கும் அவன் மனைவி மக்கள் ஒரு மாத கோட்டீஸ் கொடுத்துப் பிறகுதான் வெளியேற வேண்டும் என்று விதிக்கிறது. இந்த ஒரு மாதத்தில் என்னென்ன நேரும் என்பதை நாமே யூகித்துக்கொள்ளலாம். பண்டைக் காலத்தில் அடிமைகள் சந்தைகளில் நிறுத்தப்பட்டு, மகன் ஒருவனுக்கும், மகள் ஒருவனுக்கும், மனைவி ஒருவனுக்கும், தந்தை நான்காவது ஒருவனுக்கும் விற்கப் பட்ட நிகழ்ச்சியை ஞாபகப்படுத்துகிறதல்லவா? ஆல்ை, தோட்டங்களில் வேலை செய்பவர்களை எல்லாம், மனிதர், மனைவியர், கணவர், மக்கள் என்று பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா? எல்லாரும் மிஷின்கள் தானே ! மிஷின் ஒடுவதற்கு அத்யாவசியமான எண்ணெயை மட்டும் ஊற்றிக்கொண்டு இருந்தால் போதாதா? ஒரு தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்ட தொழிலாளி அங் த த் தோட்ட முதலாளியிடமிருந்து பற்றுச் சீட்டு ' வாங்கிக்கொண்டு போனல்தான் மற்ருெரு தோட்ட மு த லா ளி வேலைக்கு எடுத்துக் கொள்வார். இல்லாவிட்டால் அவ னு க் கு எங்கும் 46
பக்கம்:ஜெயில்.pdf/51
Appearance